For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ சேவைகளுக்காக உலக வங்கியிடம் ரூ.650 கோடி கேட்கிறது தமிழக அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் ரூ.650 கோடி கோரப் போவதாகதமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது சுகாதாரத் துறைஅமைச்சர் செம்மலை பேசுகையில்,

தமிழகத்தில் சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் ரூ.650நிதியுதவி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கியைச் சேர்ந்த குழுவினர் ஏற்கனவே வந்து தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்திச் சென்றுள்ளனர். இந்தத் திட்டங்கள் குறித்து அவர்கள் திருப்தியும்தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இது தொடர்பாக உலக வங்கி அனுப்பியுள்ள கடிதத்தில் கூட தமிழகசுகாதாரத் திட்டங்களைக் குறித்து பாராட்டி இருந்தது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் 1998ம் ஆண்டு உலக வங்கியிடம் நிதி கோரப்பட்டது. ஆனால்அவர்களுடைய திட்டங்களால் திருப்தி அடையாத உலக வங்கி அப்போது அந்தக் கோரிக்கையைநிராகரித்து விட்டது.

ஆனால் தற்போது நாங்கள் கேட்கும் நிதி உதவியை உலக வங்கி நிச்சயம் அளிக்கும். இந்த நிதியைக்கொண்டு ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார் செம்மலை.

திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி:

திண்டுக்கல் நகரில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி விரைவில் ஆரம்பிக்கப்படும்.

மாநிலம் முழுவதிலும் உடனடியாக500புதியடாக்டர்கள்நயமனம்செய்யப்படுவர். அரசுமருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவுகள் உடனடியாக ஏற்படுத்தப்படும்.

தாம்பரம் அருகே ரூ.4 கோடி செலவில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கபப்டும்.இதற்கு மத்திய அரசின் உதவியையும் கோரியுள்ளோம்.

தற்போது மகப்பேறு மருத்துவமனைகளில் கட்டணம் கொடுத்து சிகிச்சை பெறும் முறைக்கு நல்லவரவேற்பு உள்ளது. எனவே இந்த முறை மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ரேஷன் கடைகளில் ஆணுறைகள்:

"எய்ட்ஸ்" போன்ற செக்ஸ் நோய்கள் பரவாமல் தடுக்கும் முயற்சியாக ரேஷன் கடைகளில்ஆணுறைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் புகை பிடிப்பது, எச்சிலை காறி உமிழ்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கும்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து விட்டார். விரைவில் இதற்கான விதிமுறைகள்வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்.

மஞ்சள் காமாலை நோயான ஹெபாடிடிஸ்-பிக்கு தடுப்பூசி போடும் திட்டம் மேலும் 4மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X