For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணி மேரி கல்லூரி: மாறு வேடத்தில் சென்ற பெண் போலீசுக்கு மாணவிகள் அடி, உதை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராணி மேரி கல்லூரிக்குள் மாணவி போல வேடம் போட்டு உளவு பார்க்கச் சென்ற பெண்போலீஸ்காரரை மாணவிகள் கண்டுபிடித்து அடித்து உதைத்து விரட்டினர்.

தங்கள் கல்லூரியை இடித்து விட்டு புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்துள்ள தமிழகஅரசின் நடவடிக்கையைக் கண்டித்து ராணி மேரி கல்லூரி இன்று 3வது நாளாகப் போராட்டம்நடத்தி வருகின்றனர்.

காலவரையின்றி கல்லூரி மூடப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து கல்லூரிவளாகத்தினுள்ளேயே அமர்ந்து கொண்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெண் கல்லூரி வளாகத்திற்குள்சுற்றிச் சுற்றி வந்தார்.

அவரைச் சுற்றி வளைத்த மாணவிகள் அவர் யார் என்று விசாரித்துள்ளனர். ஆனால் அந்தப்பெண்ணோ அவர்களிடம் பிடிகொடுக்காமல் நழுவ முயன்றுள்ளார். மேலும் வற்புறுத்திக் கேட்ட சிலமாணவிகளை முடியைப் பிடித்து இழுத்து "அதைக் கேட்க நீ யாருடி?" என்றும் அந்தப் பெண்மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண்ணை நூற்றுக்கணக்கான மாணவிகள் சுற்றி வளைத்துக் கொண்டு"கெரோ" செய்தனர். அவர் கையிலிருந்த பர்சையும் பிடுங்கிப் பார்த்து சோதித்தனர்.

அதில் அந்தப் பெண்ணின் போட்டோவுடன் கூடிய தமிழகக் காவல் துறையின் அடையாள அட்டைஇருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் மப்டியில் வந்த பெண் போலீஸ் என்பது தெரிய வந்தது.

மாணவி வேடத்தில் உளவு பார்க்க வந்த போலீஸ்தான் அந்தப் பெண் என்று தெரிந்தவுடன் அவரைமாணவிகள் அடித்து உதைத்து விரட்டி அடித்தனர். "போலீஸ் டெளன் டெளன்" என்று கத்திமாணவிகள் கோஷம் போட்டனர். அதற்குள் வேறு சில பெண் போலீசார் விரைந்து அந்தப் பெண்போலீசை மீட்டுச் சென்றனர்.

கெட்ட வார்த்தையால் திட்டிய ரவுடிகள்:

இதற்கிடையே நேற்று நள்ளிரவுக்கு மேல் கல்லூரி வாசலில் நின்று கொண்டு சில ரவுடிகள்உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவிகளைக் கெட்ட வார்த்தைகளால்திட்டியுள்ளனர்.

நேற்று இரவு மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொண்டு மாணவிகள் தங்கள் உள்ளிருப்புப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவுக்கு மேல் அங்கு ஒரு ரவுடிக் கும்பல் வந்தது. கல்லூரியின் வாசலில் நின்று கொண்டுஉள்ளே இருந்த மாணவிகளை நோக்கி அந்த ரவுடிகள் வாயில் வராத கெட்ட வார்த்தைகளால்திட்டினர்.

சிறிது நேரம் திட்டிக் கொண்டிருந்த அவர்கள் பின்னர் சென்று விட்டனர். இத்தனையையும்அங்கிருந்த போலீசார் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் கொடுமை. அவர்கள்ரவுடிகளை விரட்டக் கூட முயற்சிக்கவில்லை.

நாளை கல்லூரி இடிப்பு?

இதற்கிடையே நாளை தங்கள் கல்லூரி இடிக்கப்படலாம் என்று ராணி மேரி கல்லூரி மாணவிகள்அச்சம் தெரிவித்துள்ளனர்.

காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டு விட்டதாலும், விடுதியைக் காலி செய்ய மாணவிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாலும் நாளை கல்லூரி இடிக்கப்படலாம் என்ற செய்தி பரவியுள்ளது.

இதையடுத்து 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.மேலும் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் மாணவிகள், ஆசிரியைகள் முடிவுசெய்துள்ளனர்.

எப்பாடு பட்டாவது கல்லூரியைக் காப்பாற்றியே தீருவது என்ற முடிவில் அவர்கள் உள்ளனர்.

அரசு அறிவித்துள்ள மாற்று ஏற்பாடுகளையும் மாணவிகள் மறுத்துள்ளனர். மாகாணக் கல்லூரி,வெலிங்டன் கல்லூரியில் ராணி மேரி கல்லூரி மாணவிகள் படிப்பதற்காக புதிய கட்டடங்கள்கட்டித் தரப்படும் என்று அரசு கூறியுள்ளது.

ஆனால் மாகாணக் கல்லூரியில் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு படிப்பதற்குத் தங்கள்பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் எனவே இதை ஏற்க முடியாது என்றும் மாணவிகள்தெரிவித்துள்ளனர்.

கல்லூரி வளாகத்தில் உள்ள பென்ட்லேண்ட் ஹவுஸ், ஸ்டோன் ஹவுஸ், ஜெய்ப்பூர் ஹவுஸ்,சங்கரியர் ஹவுஸ் ஆகியவை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள். இவைபாரம்பரியம் மிக்க சின்னங்களாக விளங்குகின்றன என்று முன்னாள் மாணவி நித்யா பாலாஜிஎன்பவர் கண்களில் நீர் மல்க தெரிவித்தார்.

இடிப்புக்கு எதிராக புதிய வெப்சைட்:

இந்நிலையில் ராணி மேரி கல்லூரி இடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடும் மாணவிகளுக்குமுன்னாள் மாணவிகள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மாணவிகள் சேர்ந்து கல்லூரி இடிப்புக்கு எதிராக இணையத் தளம் ஒன்றையும்தொடங்கியுள்ளனர்.

http://www.gopetition.com/region/97.html என்ற அந்தத் தளத்தில் தங்களது எதிர்ப்புகளை பதிவுசெய்யுமாறு பொதுமக்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்சிகள் கண்டனம்:

இதற்கிடையே ராணி மேரி கல்லூரியை இடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை பல்வேறுஅரசியல் கட்சிகள் கண்டித்துள்ளன.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு வெளியிட்டுள்ளஅறிக்கையில், ராணி மேரி கல்லூரியை இடிப்பது என்ற அரசின் முடிவு சரியானதல்ல. தற்போதுள்ளநாமக்கல் கவிஞர் மாளிகையை மாற்றுவதற்கு அரசு கூறும் காரணமும் ஏற்கும் படியாக இல்லைஎன்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வரதராஜன் கூறுகையில், தேர்வுகள் வரும் நிலையில்கல்லூரியை இடிக்கப் போவதாக அரசு கூறியுள்ளது குழப்பம் தருவதாக உள்ளது. இந்த முடிவைஅரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாணவிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ்செயலாளர் ஜி.கே. வாசன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறினார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X