For Daily Alerts
Just In
மதுரையில் முதிய தம்பதி கொடூரமாக வெட்டிக் கொலை
மதுரை:
மதுரையில் 60 வயதைக் கடந்த முதிய தம்பதியினர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
மதுரை-அவனியாபுரம் பகுதியில் வசித்து வந்தவர்கள் அண்ணாமலை நாடார் (66) மற்றும் அவரதுமனைவி கனகவள்ளி (61).
நேற்று இவர்கள் இருவரும் உடலில் பயங்கரமான வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில்பிணமாகக் கிடந்தனர்.
அவர்களுடைய மகனும், மருமகளும் வெளியே சென்றிருந்தபோது யாரோ இந்த முதிய தம்பதியரைமிகவும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந்தப் படுகொலை குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


