கள்ளக் காதல்: மனைவி, குழந்தைகள் மீது அமிலம் வீசிய கணவன்
சென்னை:
கள்ளக் காதலைத் தட்டிக் கேட்ட மனைவி மற்றும் குழந்தைகள் மீது அமிலம் வீசி விட்டுத் தப்பிய கணவனை போலீஸார் தேடுகிறார்கள்.
சென்னை அருகே உள்ள பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தேவி. சரவணனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இது தேவிக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கணவனை தட்டிக் கேட்டுள்ளார் தேவி. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் வீட்டில்டாய்லெட் கழுவ பயன்படும் அமிலத்தை எடுத்து மனைவியின்முகத்தில் ஊற்றினார்.
அப்போது அருகில் நின்றிருந்த 2 மகள்கள் மீதும் அமிலம் தெரித்தது. அமிலம் வீசப்பட்டதையடுத்து தாயும் மகள்களும் அலறித் துடித்தனர்.சப்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடிவந்தனர். இதையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பியோடினார்.
அமிலத்தால் உடல் முழுவதும் எரிந்து போன நிலையில் 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.


