போஜ்சாலா மசூதியில் முஸ்லீம்கள் தொழுகை
Subscribe to Oneindia Tamil
தர் (மத்திய பிரதேசம்):
மத்தியப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய போஜ்சாலா தலத்தில் இன்று ஏராளமான முஸ்லீம்கள்தொழுகை நடத்தினர்.
இந்த தலத்தை முஸ்லீம்கள் கமால் மெளலா மசூதி என அழைக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இங்கு இந்துக்கள் வழிபடலாம் என மத்தியத் தொல்பொருள் துறைஉத்தரவிட்டதைத் தொடர்ந்து அன்று சுமார் 2,000 இந்துக்கள் வந்து வழிபட்டனர்.
அதுபோலவே வெள்ளிக்கிழமை முஸ்லீம்கள் இங்கு தொழுகை நடத்தலாம் எனவும் தொல்பொருள்துறை உத்தரவிட்டிருந்தது. பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை தொழுகை நடத்த அனுமதிஅளிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு ஏராளமான முஸ்லீம்கள் கமால் மெளலா மசூதியில்வந்து தொழுகை நடத்தினர்.












Click it and Unblock the Notifications