சதாமுக்கு உளவுத் தகவல்களை அனுப்பிய ரஷ்யா
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
ஈராக் மீது அமெரிக்கா போரைத் தொடங்குவதற்கு முன் சதாம் ஹூசேனுக்குத் தேவையானஅனைத்து உளவுத் தகவல்களையும் ரஷ்யா அளித்து வந்ததாகத் தெரிகிறது.
போர் தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் மற்ற வெளிநாட்டுத் தலைவர்களும்நடத்திய ஆலோசனைகளின் விவரங்களைக் கூட ரஷ்யா உளவறிந்து சதாமுக்குத் தெரிவித்துள்ளதுஎன அந்தப் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.
உளவுத் தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது என ஏற்கனவே ஈராக்கும்,ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பாக்தாத்தின் ஒரு கட்டடத்தில் இது தொடர்பானஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications