நதிகள் இணைப்புக்கு அதிக செலவாகாது: சுரேஷ் பிரபு
சென்னை:
நாடு முழுவதிலும் உள்ள நதிகளை இணைக்க நாம் எதிர்பார்த்ததை விட குறைவான செலவேபிடிக்கும் என நதிகள் இணைப்புத் திட்டப் பணிக் குழுவின் தலைவர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டுமென்றால் முதலில் இமாலய மலைப்பகுதிகளில் ஓடிக் கொண்டிருக்கும் நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும்.
பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளை இணைக்க வேண்டும்.
உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.ஆனால் உலகின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 2.5 சதவீதம் மட்டுமே இந்திய நிலப்பரப்பாகும்.
நதிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் சுமார் 400 ஹெக்டேர் நிலத்தில் சிறப்பாக பாசனம் செய்யமுடியும். மேலும் 40,000 மெகாவாட் நீர் மின்சாரத்தை நம்மால் தயாரிக்க முடியும்.
இவற்றைத் தவிர காடுகளும் வளம் பெறும். லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பையும்பெறுவார்கள்.
எனவே ஆகும் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்து மாநிலங்களிலும் ஓடும் நதிகளைஇணைத்து அதை மக்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும்.
நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு நாம் எதிர்பார்க்கும் தொகையை விடகுறைவாகவே செலவாகும். இருந்தாலும் இது தொடர்பான முழு அறிக்கை தயாரான பின்னர்தான்இதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்பது தெரிய வரும்.
தலைசிறந்த நிபுணர்களைக் கலந்து ஆலோசித்த பின்னர் நதி நீர் இணைப்பு திட்டம் தொடர்பான முழுஅறிக்கை தயார் செய்யப்படும்.
நாடு முழுவதும் ஓடும் 30 நதிகளை இணைக்கும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக தற்போது 6நதிகளை இணைக்கும் சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கை தயாராகியுள்ளது.
நதிகளில் உள்ள நீர் இருப்பு தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின்உதவியுடன் செயற்கைக் கோள்கள் மூலமும் ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றார் சுரேஷ் பிரபு.
சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரபு மத்திய மின்துறை அமைச்சராக மிகச் சிறப்பாகசெயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வாஜ்பாய்க்குசிவசேனை தலைவரான பால் தாக்கரே உத்தரவிட்டார்.
ஆனால் சுரேஷ் பிரபுவை இழக்க விரும்பாத வாஜ்பாய் அவரிடம் நதிகள் இணைப்புத் திட்டப்பணியைக் கொடுத்துள்ளார்.


