For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு பரவியது சார்ஸ்: முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவில் முதல் சார்ஸ் நோயாளி கோவாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தவிர சிட்னியில்இருந்து வந்த இன்னொரு பயணியும் சார்ஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் டெல்லி மருத்துமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த 32 வயதான பார்வே என்ற வாலிபர் சார்ஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.கோவாவைச் சேர்ந்த அவர் சிங்கப்பூரில் மெரைன் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 26ம் தேதிஇவர் கப்பலில் ஹாங்காங் சென்றார். பாங்காக்கில் 13 மணி நேரம் இருந்த இவர் 30ம் தேதி சிங்கப்பூர் திரும்பிவந்து அன்றைய தினமே மும்பை வந்தார்.

மும்பையில் இரு தினங்கள் தங்கிவிட்டு ஏப்ரல் 1ம் தேதி கோவாவுக்குச் சென்றார். ஏப்ரல் 8ம் தேதியன்று இவருக்குலேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கோவாவில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்குசிகிச்சை பலனளிக்காததால் 10ம் தேதி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மிகக் கடுமையான காய்ச்சலுடன் இருமலும் இருந்தது. இதையடுத்து அவருக்கு பல சோதனைகள்நடத்தப்பட்டன. ஆனால், எந்த நோய் என உறுதியாகவில்லை. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் அவர்இருந்ததால் ஒருவேளை சார்ஸ் நோய் தாக்குதல் இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் அவரது ரத்தம், யூரின், சளி ஆகியவற்றை புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சிமையத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந் நிலையில் அவரது உடல் நலம் தேற ஆரம்பித்தது. இதனால் கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் இருந்துடிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நேரத்தில் புனே வைரஸ் ஆய்வு மையத்தில் இவரது ரத்தம், சளி சாம்பிள்களில்நடத்தப்பட்ட ஆய்வில் அவருக்கு சார்ஸ் நோய்த் தாக்குதல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து நேற்றிரவு கோவா நலத்துறைக்கு புனேயில் இருந்து அவசர தகவல் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவா அதிகாரிகள் அந்த மெரைன் என்ஜினியரின் வீட்டுக்குச் சென்று அவரையும் அவரதுமனைவியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்களை தனி அறையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இந்தியாவில் சார்ஸ் நோயால் தாக்கப்பட்ட முதல்நோயாளி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாலிபரின் ரத்தத்தில் சார்ஸ் நோயை உருவாக்கும் கொரோனோ வைரஸ் இருப்பது உறுதியாகிவிட்டதால்அவருக்கு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும் டெல்லியில் உள்ள மத்திய நலத்துறையின் டைரக்டர்ஜெனரல் அகர்வால் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இந்த வாலிபர் இப்போது நலமாக இருப்பதாகமருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர். அவருக்கு காய்ச்சலோ, இருமலோ இப்போது இல்லை. மேலும் மூச்சுத்திணறலும் இல்லை. இதனால் இவரது உடலில் சார்ஸ் வைரசின் இங்குபேசன் பீரியட் (வைரசின் வாழ்நாள்)முடிந்திருக்கும் என்று தெரிகிறது.

ஆனால், மும்பையிலும் கோவாவிலும் இவரைச் சந்தித்த உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த நோய்பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அது தான் கவலை தருகிறது.

அவர்களையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த வாலிபரின்வீட்டில் உள்ள அவரது தந்தைக்கு இந் நோய் தாக்குதல் ஏற்படவில்லை என்றார்.

டெல்லியில் இன்னொருவர்:

இதற்கிடையே நேற்றிரவு சிட்னியில் இருந்து டெல்லிக்கு வந்த நியூசிலாந்தைச் சேர்ந்த 42 வயதான ராஸ் என்றபயணிக்கும் சார்ஸ் நோய்க்கான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவர் டெல்லி ராம் மனோகர் லோகியாமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு லேசான மூச்சுத் திணறல் உள்ளது.

இவரது சளி, ரத்தம், யூரின் ஆகியவையும் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்தியாவில் வசதிகள் இல்லை:

சார்ஸ் நோய் இந்தியாவுக்கு எந்த நேரமும் பரவலாம் என்று எச்சரிக்கப்பட்டு வந்தாலும் கூட இந்தியமருத்துவமனைகளிலும் விமான நிலையங்களிலும் சார்ஸ் தொடர்பான நடவடிக்கை எடுக்க எந்த வசதிகளும்இதுவரை செய்யப்படவில்லை.

மும்பை, டெல்லி, சென்னை போன்ற சர்வதேச விமான நிலையங்களில் மாஸ்க்குகள் கூட அணியாத டாக்டர்களும்நர்ஸ்களும் நிறுத்தப்பட்டு பயணிகளை சோதனை செய்கின்றனர். என்ன வகையான சோதனை செய்வது என்று கூடதெரியாமல் காய்ச்சல் இருக்கிறதா இருமல் இருக்கிறதா என்பது போன்ற பொத்தம் பொதுவான சோதனைகள் தான்நடக்கின்றன.

மேலும் இந்த நோயாளிகளை ஆய்வு செய்யத் தேவைப்படும் உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ள நவீனமருத்துவ கிட்கள் இன்னும் இந்தியா வந்து சேரவில்லை.

இதற்கிடையே தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர்கள் குழு இன்று டெல்லியில் இருந்து கோவாவிரைந்துள்ளது. நோய் பரவலைத் தடுப்பது குறித்து விவாதிக்க இன்று காலை உயர் மட்டக் கூட்டத்தையும் சுஷ்மாசுவராஜ் கூட்டினார்.

5 சதவீதத்தினரே பாதிப்பு:

கொரோனா வைரஸால் தாக்கப்படுபவர்களில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே சார்ஸ் நோய் ஏற்படுகிறது.மற்றவர்களுக்கு இந்த வைரஸால் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படுவதில்லை என உலக சுகாதார அமைப்புகூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X