போதையில் பிளாட்பாரத்தில் காரை ஏற்றிய தொழிலதிபர்: சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளர் பலி
சென்னை:
சென்னையில் ஒரு கார் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் ஏறியதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒருகட்டடத் தொழிலாளர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் 4 தொழிலாளர்கள்படுகாயமடைந்தனர்.
குடிபோதையில் இந்தக் காரை ஓட்டி வந்த தொழிலதிபரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை-அசோக் நகரில் சேலத்தைச் சேர்ந்த சில கட்டடத் தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். பகலில் வேலை செய்து விட்டு அவர்கள் இரவில் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்குவதுவழக்கம்.
அதுபோல் இன்று அதிகாலை சில கட்டடத் தொழிலாளர்கள் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு கார் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் ஏறியது. வேகமாகவந்த அந்தக் கார் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் ஏறி நசுக்கியது.
இதில் 5 கட்டடத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரை ஓட்டி வந்த அசோக் நகரைச் சேர்ந்த கெளசர் என்ற தொழிலதிபர் நல்ல குடிபோதையில் காரைஓட்டி வந்துள்ளார். இதனால்தான் அந்தக் கார் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் ஏறி ஒரு உயிரையேபலி வாங்கியுள்ளது.
கெளசரை கைது செய்த போலீசார் அவருடைய காரையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.


