For Daily Alerts
Just In
யானை தாக்கி தேயிலைத் தோட்ட பெண் ஊழியர் பலி
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் யானை தாக்கியதில் ஒருபெண் தொழிலாளர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு யானை தேயிலை பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத்துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எறிந்தது.
இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக்காப்பாற்றுவதற்காக வந்த மேலும் 4 பேரையும் யானை தாக்கியது. இதில் அவர்கள் படுகாயம்அடைந்தனர்.
இதன் பின்னர் அந்த யானை காட்டுக்குள் ஓடி விட்டது. காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாகப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


