For Daily Alerts
Just In
சரக்கு இல்லாமல் திரும்பும் கப்பல்கள்
சென்னை:
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை உள்ளிட்ட துறைமுகத்திற்கு வந்த கப்பல்கள்சரக்குகள் ஏதும் ஏற்றப்படாமலேயே திரும்பிச் சென்றன.
லாரிகள் வேலைநிறுத்தம் இன்று 7வது நாளை எட்டியுள்ள நிலையில் நாட்டின் பலபகுதிகளிலுமிருந்து துறைமுகத்திற்கு சரக்குப் போக்குவரத்து அடியோடு நின்று போயுள்ளது.
இதனால் ஏற்றுமதி வர்த்தகமும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களிலிருந்து இறக்கப்பட்ட ஏராளமான சரக்குகள் அங்கேயேஏராளமாகத் தேங்கியுள்ளன.
மேலும் ஏற்றிச் செல்வதற்குச் சரக்குகள் இல்லாத காரணத்தால் "வெறும் கையுடன்" அனைத்துக்கப்பல்களும் திரும்பி சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலை நீடித்தால் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முழுவதுமாகப் பாதிக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது.


