விவசாயிகள் நடத்தும் கறுப்புக் கொடி போராட்டம்: காங். பங்கேற்பு
சென்னை:
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து வரும் 23ம் தேதி அனைத்துக் கட்சிகள்மற்றும் விவசாய அமைப்புகள் நடத்தும் கறுப்புக் கொடி போராட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ளும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது தவறு. அதை மீண்டும் வழங்கக் கோரிவிவசாய அமைப்புகள் போராடி வருகின்றன.
இதைப் பெரிய அளவில் நடத்தும் விதமாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயஅமைப்புகள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அமைப்பின் சார்பில் வரும் 23ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடைபெறவுள்ளது. இது விவசாயிகள் பிரச்சனை என்பதால் இப்போராட்டத்தில்காங்கிரஸ் கட்சி கண்டிப்பாகக் கலந்து கொள்ளும்.
ஆனாலும் வரும் 24ம் தேதி திமுக தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கலந்து கொள்வது தொடர்பாக நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் பார்வையாளரான ரமேஷ் சென்னிதாலாவுக்கு அறிக்கைஅனுப்பியுள்ளோம். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து விட்டு அவர்எங்களுக்குத் தகவல் அளிப்பார்.
அதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து நாங்கள் முடிவுசெய்வோம்.
வேலூர் நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல்காஞ்சிபுரம் அருகே மணல் திருடியவர்களைத் தடுக்க முயன்ற அதிகாரி லாரியால் ஏற்றிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகக் கெட்டுப் போய்விட்டது என்றே தெரிகிறது என்றார் சோ.பா.
நிருபர்களுக்கு சோ.பா. பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவனும் உடன் இருந்தார்.
இதற்கிடையே 23ம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின்போது திமுக தொண்டர்கள்அனைவரும் கறுப்புச் சட்டை அல்லது கறுப்புத் துண்டு அணிந்து கொண்டு போராட்டம் நடத்தவேண்டும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.


