மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் 2003 அறிமுகம்
சான் பிரான்சிஸ்கோ:
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய புதிய விண்டோஸ் சர்வர் 2003ஐ அறிமுகம் செய்துள்ளது.இன்று முறைப்படி அது தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் புதிய சர்வர் மூலம் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் அதிக பைல்களை சேமிக்க முடியும்என்று மைக்ரோசாப்ட் தலைவர் ஸ்டீவ் பால்மர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
வின்டோஸ் சர்வர் 2003ல் பாதுகாப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ளசர்வரை விட 30 சதவீதம் அதிக வேகத்துடன் இந்தப் புதிய சர்வர் செயல்படும் என்றார்.
சர்வர் 2003 டேட்டாசென்டர் எடிசன், சர்வர் 2003 என்டர்பிரைஸ் எடிசன், சர்வர் 2003ஸ்டாண்டர்டு எடிசன், சர்வர் 2003 வெப் எடிசன் மற்றும் வின்டோஸ் ஸ்மால் பிசினஸ் சர்வர் 2003ஆகியவை வின்டோஸ் சர்வர் 2003-ன் கீழ் வருகின்றன.
வின்டோஸ் சர்வர் 2003-உடன் விசுவல் ஸ்டுடியோ டாட் நெட் 2003 மற்றும் எஸ்.க்யூ.எல். சர்வர்2000 என்டர்பிரைஸ் எடிசன் ஆகியவற்றையும் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.


