சார்ஸ்: ஹாங்காங்கில் சிக்கிய 10 இந்தியர்கள் விடுவிப்பு
பெய்ஜிங்:
சார்ஸ் நோய் இருப்பதாக ஹாங்காங் நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக மருத்துமனையில் சேர்க்கப்பட்ட 10இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்த பங்கா மெலாவிஸ் சாடு என்ற சரக்குக் கப்பலில் இவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.இந்தக் கப்பல் தாய்லாந்தில் இருந்து புறப்பட்டது. சிங்கப்பூரில் 3 நாட்கள் நின்ற பின்னர் சீனாவுக்கு இந்தப் கப்பல்புறப்பட்டது.
வழியில் கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கப்பலை ஹாங்காங்துறைமுகத்தில் நிறுத்த கேப்டன் அனுமதி கோரினார். அவருக்கு ஹாங்காங் நிர்வாகம் அனுமதி அளித்ததைத்தொடர்ந்து 8 நாட்களுக்கு முன் கப்பல் அந் நாட்டு துறைமுகத்துக்குள் நுழைந்தது.
உடனே கப்பலில் இருந்த அனைவருக்கும் ஹாங்காங் மருத்துவர்கள் சார்ஸ் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 10 இந்தியர்கள் மற்றும் 14 பேருக்கு சார்ஸ் அறிகுறிகள் இருப்பதாகக் கூறி ஹாங்காங் அதிகாரிகள்அவர்களை பிரின்ஸஸ் மார்க்கெட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், தங்களுக்கு சார்ஸ் நோய் இல்லை எனஇந்த இந்திய ஊழியர்கள் சண்டையிட்டுப் பார்த்தனர். ஆனாலும் அவர்கள் மருத்துவமனையில் இருந்துவிடுவிக்கப்படவில்லை.
இவர்கள் வந்த கப்பலும் ஹாங்காங்காகுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.
மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர்களுக்கு சார்ஸ் இல்லை என்று தெரியவந்தது.இதையடுத்து 10 பேரும் நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஹாங்காங்கில் இதுவரை சார்ஸ் நோய்க்கு 170 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 20 பேர்:
இதற்கிடையே இந்தியாவில் இதுவரை 20 பேருக்கு சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக மக்களவையில் நலத்துறைஇணையமைச்சர் ராஜா தெரிவித்தார். இதில் உலக சுகாதார அமைப்பு வரையறப்படி யாரும் சார்ஸ் நோயாளிகள்அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளபடி கடுமையான சார்ஸ் நோயால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.20 பேருக்கு அந்த நேயாக்கான சாதாரண அறிகுறிகள் தான் இருந்தன.
இதில் மகாராஷ்டிரத்தில் 15 பேர், தமிழகத்தில் ஒருவர், மேற்கு வங்கத்தில் 2 பேர், பஞ்சாபில் ஒருவரும்அடங்குவர்.


