கோவில் வழிபாடுகளில் தமிழ்: பொன்னம்பல அடிகளார் வலியுறுத்தல்
தஞ்சாவூர்:
ஆன்மிகத்திலும், வழிபாட்டிலும் தமிழ் என்ற நிலை உருவாக வேண்டும் என்று குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூரில் நடந்த தெய்வத் தமிழ் வழிபாட்டுப் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு அவர்பேசுகையில்,
சமய உலகத்தை ஒரு மொழி காத்தது என்றால் அந்தப் பெருமை தமிழ் மொழிக்கே உண்டு.இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழி, ஆண்டவனுக்க ஆகாது, இறைவனுக்குப் புரியாது எனசிலர் கூறுவதுதான் புரியாத புதிராக உள்ளது.
வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் தமிழ் என்ற நிலை உருவாக வேண்டும். நாம் உணர்ந்து தெரிந்தமொழியிலேயே இறைவனை வழிபட வேண்டும்.
உலகம் முழுவதும் வியாபித்துள்ள இறைவன் தனக்கென ஒரு இடம் வேண்டும் எனக் கேட்டதில்லை.திருக்கோவில்கள் என்பவை இறைவனுக்காக மட்டும் கட்டப்பட்டவை என்றும் கருதக் கூடாது.அவை மனித சமுதாயம் கூடி வாழும், உறவு கொள்ளும் இடங்களாகும்.
அவ்வாறு இந்தக் கோவில்களுக்கு வரும் மக்களுக்குப் புரியாத மொழியில் பேசினாலோ,வழிபட்டாலோ மனிதர்களுக்குள் எப்படி உறவு வளரும்? தமிழகத்தில் கோவில்கள் வெறும்சோற்றுக் கூடாரங்கள் அல்ல. அவை கல்விக் கூடங்களாகவும் விளங்கியுள்ளன.
நம் நாட்டில் சமாதிகள் கூட கோவில்கள் ஆகலாம். ஆனால் ஒருபோதும் கோவில்கள் சமாதிகளாகஆகிவிடவே கூடாது என்றார் பொன்னம்பல அடிகளார்.
இம்மாநாட்டில் தமிழண்ணல், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் உள்ளிட்டவர்கள்கலந்து கொண்டு பேசினர்.


