Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகிரியிடம் இரவு, பகலாக விசாரணை: வீடியோவில் பதிவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரியிடம்போலீஸார் விடிய விடிய துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை மதுரை செல்லூர், தல்லாகுளம் மற்றும்சத்திரப்பட்டி காவல் நிலையங்ளில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 நாட்கள் மட்டுமே போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போலீஸார் ஒருநொடியைக் கூட வீணாக்காமல் அழகிரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள்கிழமை மாலையில் இந்த விசாரணை தொடங்கியது. அன்று இரவு முழுவதும் அவர்விசாரிக்கப்பட்டதாகவும் அதிகாலையில்தான் விசாரணை முடிந்ததாகவும் அதன் பிறகே அவர் தூங்கஅனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அழகிரிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து தலைசுற்றல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மதுரைராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து 3 டாக்டர்கள் குழு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியது.

ரத்த அழுத்தம், களைப்பு, மன அழுத்தம் மற்றும் காய்ச்சலால் அழகிரி தாக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் கூறியடாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து மருந்துகளும் தந்தனர்.

காவல் நிலையத்தில் அழகிரி உணவையும் தவிர்த்து வருவதாகத் தெரிகிறது.

இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தான் அழகிரியிடம் விசாரணை நடத்தினார்.அவர் விசாரணைக்கு நன்றாகவே ஒத்துழைத்ததாக முதலில் கூறிய போலீசார் இப்போது பல்டிஅடித்துள்ளனர்.

அவர் சரியாக பதில் சொல்லவில்லை, மேலும் உடனிருந்த வழக்கறிஞர் விசாரணைக்குஇடைஞ்சலாக இருந்தார். இதனால் அவரை தனியே விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனநீதிமன்றத்தில் போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

முதலில் அவரை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர்.ஆனால், 2 நாட்கள் மட்டும் விசாரிக்க அனுமதி தந்தார் நீதிபதி வனிதா. மேலும்விசாரணையின்போது அழகிரியின் வழக்கறிஞரும் உடன் இருக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த இரு நாட்களாக நடந்த விசாரணையின்போதும் வழக்கறிஞர் மோகன் குமார்உடனியிருந்தார்.

இப்போது அழகிரியை மேலும் சில நாட்கள் தங்கள் காவலில் வைக்க முடிவு செய்துள்ள போலீசார்,அவர் சரியாக ஒத்துழைப்புத் தரவில்லை என்று புருடா விடுவதாகத் தெரிகிறது.

இதனால் தான் வழக்கறிஞர் இல்லாமல் அவரைத் தனியே விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடந்தது. இதன் மீதான தீர்ப்பை மாலையில் நீதின்றம் வழங்கவுள்ளது.போலீஸ் காவல் நீட்டிப்பு தரப்பட்டால் அவரை மீண்டும் போலீசார் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்வர்.

அதற்கான அனுமதி தரப்படாவிட்டால் மீண்டும் நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

ஆனால், தன்னை தனியே போலீசாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் என்னைக் கொன்றுவிட வாய்ப்புள்ளது எனஅழகிரி கூறியுள்ளார்.

நேற்றிரவில் அழகிரி மதுரைக்கு அருகே உள்ள சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போது சத்திரப்பட்டி காவல் நிலையத்தைச் சுற்றி 50க்கும்மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார், உதவிக் கமிஷனர் போஸ் தலைமையில் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருந்தனர்.

அழகிரியிடம் நடந்த விசாரணை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள்போயஸ் கார்டனுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களில் தங்களுக்கு வேண்டாததைஎடிட் செய்துவிட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைப்பர் என்று தெரிகிறது.

மேலும், அழகிரி கூறிய பதில்கள் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டன.

இந்த விசாரணையின்போது சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், வழக்குக்கு அவைமிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை மதுரை 6-வது நீதிமன்றத்தில் அழகிரி ஆஜர்செய்யப்படவுள்ளார். இந் நிலையில் தான் அவரை தனியே விசாரிக்க போலீசார் அனுமதிகேட்டுள்ளனர்.

வதந்தியால் குவிந்த தொண்டர்கள்:

இதற்கிடையே மதுரை சத்யசாய் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் சோதனை நடப்பதாக வந்ததகவலையடுத்து அங்கு திமுக தொண்டர்களும், பத்திரிக்கையாளர்களும் நேற்றிரவில் கூடினர்.

இதனால் அதிகாலை வரை காத்திருந்துவிட்டுத் தான் நமது நிருபர் உள்பட மற்ற பத்திரிக்கைநிருபர்களும் திரும்பினர்.

ஆனால் போலீஸார் சோதனை ஏதும் நடக்கவில்லை. அதே நேரத்தில் எந்த நேரமும் சோதனைநடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


-->
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+