இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையை போலீசில் ஒப்படைத்த பெண்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
  Bride Vidhya
  தந்தை பாலசுப்பிரமணியத்துடன் மணமகள் வித்யா
  சென்னை:

  கூடுதலாக வரதட்சணை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என்று மிரட்டிய மாப்பிள்ளையைகல்யாண மண்டபத்தில் வைத்தே போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒருபுரட்சிப் பெண். இதனால் திருமணம் நின்று போனது.

  சமீபத்தில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை போலீஸில் ஒப்படைத்து பெரும் பரபரப்பைஏற்படுத்தினார் டெல்லியைச் சேர்ந்த நிஷா ஷர்மா. அந்த வரிசையில் சென்னையைச் சேர்ந்த வித்யாஎன்ற பெண்ணும் சேர்ந்துள்ளார்.

  மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மகள் வித்யா (வயது 28). ஒருதனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன்என்பவரின் மகன் பாலாஜிக்கும் (வயது 31) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவரும்தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

  நேற்று காலை காலை திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்திற்காக பெண் வீட்டார் சார்பில் ரூ.3 லட்சம் அளவுக்கு நகை, ரொக்கம் தருவது என்று முடிவாகியிருந்தது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போதுபாலாஜியின் தந்தை கண்ணன், தாயார் பானுமதி, சகோதரர் கார்த்திக் ஆகியோர் கூடுதலாகவரதட்ணை கேட்டனர். என்ன என்ன கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பட்டியலாககொடுத்துள்ளனர்.

  திடீரென்று கேட்டால் எப்படிக் கொடுப்பது, திருமணத்திற்குப் பிறகு தருவதாக வித்யாவின் தந்தைபாலசுப்ரமணியம் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த கண்ணன், பானுமதி, கார்த்திக்ஆகியோர் கூடுதல் வரதட்சணை கொடுத்தால்தான் காலையில் திருமணம் இல்லாவிட்டால் நடக்காதுஎன்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

  இதையடுத்து பாலசுப்பிரமணியம், மாப்பிள்ளையின் தந்தை மற்றும் உறவினர்களின் காலையும்கையையும் பிடித்துக் கெஞ்சியுள்ளார். திருமணத்தை நிறுத்திவிட வேண்டாம் என அழுதுள்ளார்.ஆனால், அவர்கள் பிடிவாதமாகவே இருந்தனர்.

  இதைப் பார்த்துக் கொண்டிருந்த மணப்பெண் வித்யா அதிர்ச்சியடைந்தார். கல்யாணத்திற்கு முன்பேஇப்படி அடாவடியாக இருக்கும் மாப்பிள்ளை குடும்பத்தினர், கல்யாணத்திற்குப் பிறகு எப்படிஇருப்பார்களோ என்று யோசித்துப் பார்த்தார்.

  திருமணத்தை நிறுத்தி விடுவது என்ற முடிவுக்கு வந்தார். தனது தந்தை மற்றும் குடும்பத்தினரிடம்இதைத் தெரிவித்தார். மகளே வேண்டாம் என்று கூறி விட்ட பிறகு திருமணம் வேண்டாம் என்றுபாலசுப்ரமணியமும் முடிவு செய்தார்.

  Groom Balaji
  மணமகன் பாலாஜி கைதானபோது
  இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் கல்யாண மண்டபத்தில் இருந்துமணக்கோலத்தில் வெளியேறிய வித்யா நேராக அசோக் நகர் காவல் நிலையம் சென்றார்.

  மணக்கோலத்தில் ஒரு பெண் அதிகாலையில் காவல் நிலையம் வந்ததைப் பார்த்த போலீசார்ஆச்சரியமடைந்தனர். அவர்களிடம் விவரத்தைச் சொன்னார் வித்யா. இதையடுத்து 5 மணியளவில்பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பா தலைமையில் போலீஸார் படை திருமணம் நடக்க இருந்தகல்யாண மண்டபத்திற்கு வந்தனர்.

  பட்டு வேட்டி சட்டையில் இருந்த மாப்பிள்ளை பாலாஜி, தந்தை கண்ணன், தாயார் பானுமதி,சகோதரர் கார்த்திக் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

  இதையடுத்து திருமணத்துக்கு வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். மண்டபமே காலியானது.

  காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் கூடுதல் வரதட்சணை கேட்டதை மாப்பிள்ளையும்அவரது குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

  Grooms Father Kannan
  மணமகனின் தந்தை கண்ணன்
  (படங்கள் நன்றி- தினகரன்)
  இச் சம்பவம் குறித்து வித்யா நம்மிடம் கூறியதாவது:

  அப்பா ரொம்ப சிரமப்பட்டுத் தான் எனக்கு நகை, பணம் சேர்த்தார். என் திருமணத்துக்கு பணம்சேர்ப்பதற்குள் எனக்கு 28 வயதாகிவிட்டது. ஆனால், திருமண மண்டபத்தில் எங்களை மாப்பிள்ளைவீட்டார் நடத்திய விதமும், என் தந்தையைக் கேவலப்படுத்திய விதத்தையும் பார்த்தபோது எனக்குஇந்தத் திருமணத்தின் மீதே நம்பிக்கை விட்டுப் போகச் செய்தது.

  வரதட்சணை கேட்டு பெண்களை கொடுமை செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கவேண்டும். என் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படவில்லை. பெரிய துன்பத்தில் இருந்துதப்பித்தது போலத் தான் எண்ணத் தோன்றுகிறது என்றார்.

  இச் சம்பவம் குறித்து வித்யாவின் சகோதரர் கணேஷ் கூறுகையில், ரூ. 3 லட்சம் வரை வரதட்சணைகொடுத்தும் கூடுதலாக கேட்டதால் மறுத்து விட்டோம்.

  ஆனால் கல்யாணத்தையே நிறுத்தி விடுவதாக அவர்கள் மிரட்டவே, வித்யாவுக்கு இந்ததிருமணத்தில் விருப்பம் போய் விட்டது. மேலும், சமரசம் பேச வந்த எங்களது உறவினர்களையும்,புரோகிதரையும் மாப்பிள்ளை வீட்டார் தரக்குறைவாக பேசியதோடு, அடிக்கவும் முயற்சித்தனர்.

  கட்டாயப்படுத்தி எங்கள் வீட்டுப்பெண்ணை இவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க நாங்கள்விரும்பவில்லை என்றார்.

  கூடுதல் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை குடும்பத்தினரை கூண்டோடு போலீஸில் பிடித்துக்கொடுத்த வித்யாவை ஏராளமானோர் பாராட்டினர்.

  பாலாஜி குடும்பத்தினர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறைக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  Mail this to a friend  Post your feedback  Print this page 

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more