வீரப் பெண் வித்யா!
சென்னை:
வரதட்சணை கேட்டு அடாவடி செய்த மாப்பிள்ளைக் குடும்பத்தையே கூண்டுக்குள் தள்ளியுள்ளபுரட்சிப் பெண் வித்யா சாதாரண பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
வித்யாவின் தந்தை பாலசுப்ரமணியம், ஓய்வு பெற்ற ராணுவ வீரராவார். தாயார் மகாலட்சுமி.
வித்யா பி.எஸ்.சி வரை படித்துள்ளார். இவரது தம்பி கணேஷ் விமானப் படையில் பணியாற்றிவருகிறார்.
மேற்கு மாம்பலத்தில் வாடகை வீட்டில் இவர்கள் வசித்து வருகிறார்கள். பொருளாதாரரீதியில் கீழ்நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வித்யா மற்றும் அவரது தந்தை எடுத்ததுணிச்சலான முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று யோசிக்காமல், அடாவடி செய்த மாப்பிள்ளைக்குடும்பத்திற்கு சரியான தண்டனை கொடுக் நினைத்த அவர்களது செயலை திருமணத்துக்குவந்திருந்த பலரும் பாராட்டிவிட்டுச் சென்றனர்.
இந்தப் பெண்ணை முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைத்து எந்த வகையிலாவதுஉதவி பெற்றுத் தர மேற்கு மாம்பலம் பகுதி அதிமுகவினர் முயன்று வருகின்றனர்.


