திருமண மண்டபத்திலேயே மாப்பிள்ளையை உதறிய மணப்பெண்!
பாண்டிச்சேரி:
கல்யாண வீட்டில் பெண் வீட்டாருடன் மாப்பிள்ளை வீட்டார் அடிதடியில் இறங்கியதால் வெறுப்புற்ற மணப்பெண்கல்யாணத்தை நிறுத்தி விட்டார்.
சென்னையில் அடாவடியாக வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை வீட்டாரை வித்யா என்ற பெண்,குடும்பத்தோடு போலீஸ் நிலையத்தில் நிறுத்திய சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காதநிலையில் பாண்டிச்சேரியில் இன்னொரு பரபரப்பு அரங்கேறியுள்ளது.
பாண்டிச்சேரி வில்லியனூர் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவருக்கும்,வேன் டிரைவராக இருக்கும் அங்காளன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
புதன்கிழமை திருமணம் நடக்கவிருந்தது. கல்யாணத்திற்காக செவ்வாய்க்கிழமை இரவு தனதுகுடும்பத்தினருடன் மணப்பெண் சித்ரா, அங்காளனின் ஊரான காந்தாரப்பேட்டைக்குச் சென்றார்.
அப்போது தனது ஊரில் உள்ள கோவில்களில் சாமி கும்பிட்டு விட்டு பிறகு கல்யாண ஊர்வலத்தைத்துவக்கலாம் என்று மாப்பிள்ளை கூறியுள்ளார். அதற்கு பெண்ணின் தந்தை காசிநாதன், ஏற்கனவேபயணக் களைப்பில் அனைவரும் டயர்டாக உள்ளனர்.
எனவே கோவில்களுக்குச் செல்லாமல் நேராக கல்யாண மண்டபத்திற்குச் சென்று விடலாம் என்றுகூறியுள்ளார்.
இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில்திடீரென்று பெண் வீட்டார் மீது, மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் காண்டனர். கண் எதிரே இரு குடும்பத்தினரும்கட்டிப்புரண்டு சண்டை போட்டதைப் பார்த்த மணப்பெண் சித்ரா அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கல்யாணத்தை நிறுத்துமாறு தனது தந்தையிடம் கூறினார். புதுப்பேட்டைபோலீஸாருக்கும் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து மாப்பிள்ளையின் தந்தை வாசுதேவன்உள்ளிட் 3 பேரைக் கைது செய்தனர்.
சித்ரா கல்யாணத்தை நிறுத்தி விட்டாலும்,அவரை மணந்து கொள்வதில் மாப்பிள்ளை அங்காளன்இன்னும் விருப்பமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார். பெண் வீட்டில் உள்ள ஒரு சிலர்தான்தூண்டி விட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டதாக அவர் புகார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள இரு கல்யாண கலாட்டாக்கள் இவை. இரண்டிலுமே மணப்பெண்கள் தான்துணிச்சலாக திருமணத்தைத் தடுத்துள்ளனர்.


