For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா ராணுவ தளங்களில் அமெரிக்க படைகள்?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Pentagonஇந்தியா ராணுவ தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

இந்தியாவுடன் தொடர்ந்து ராணுவ, விமானப் படை கூட்டுப் பயிற்சியில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவ தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காதிட்டமிட்டு வருகிறது.

இது தொடர்பாக இப்போது அமெரிக்கா சென்றுள்ள துணைப் பிரதமர் அத்வானியுடன் அதிபர் புஷ் பேச்சுநடத்துவார் என்று தெரிகிறது.

ஈராக்கில் அமைதி காப்புப் பணியில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்திய ராணுவத்தையும் அனுப்பவேண்டும் என புஷ் நெருக்குதல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக இந்தியா இன்னும் இறுதி முடிவெதையும்எடுக்கவில்லை.

படையை அனுப்பலாம் என இந்திய வெளியுறவுத்துறையும் ரா உளவுப் பிரிவும் பிரதமர் வாஜ்பாயிடம் கருத்துத்தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ரஷ்யாவிலும் பிரான்சிலும் நேரில் சந்தித்துக் கொண்டபுஷ்-வாஜ்பாய் ஆகியோர் ப்போதும் இந்த படை விவகாரம் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.

மியான்மார் (பர்மா), பங்களாதேஷ், திபெத் ஆகிய நாடுகளிலும் பகுதிகளிலும் சீனா ராணுவ தளங்களையும்,இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை உளவறியும் சக்தி மிக்க டிரான்ஸ்பான்டர்களையும் அமைத்து வருகிறது.

அதே போல மியான்மார் கடற் பகுதியிலும் சீனா கடற்படை முகாமை அமைத்து வருகிறது. இதனால் சீனாவால்மியான்மார் விலைக்கு வாங்கப்படுவதைத் தடுக்க அந் நாட்டுக்கு இந்தியாவும் கோடிக்கணக்கான டாலர்களைத்தந்து வருகிறது.

மியான்மாரில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தியா சாலைகள் அமைத்துத் தந்துள்ளது. மேலும் சிறிய ரகஆயுதங்களையும் தந்து வருகிறது. இதற்குப் பலனாக சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துமாறு மியான்மார்ராணுவ ஆட்சியாளர்களை இந்தியா கோரி வருகிறது.

இதுவரை அந் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரங்கணை ஹான் சான் சு கிக்குத் தந்து வந்த ஆதரவையும் இந்தியாதிரும்பப் பெற்றுவிட்டது. மியான்மாரில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று கொடுத்த வந்த குரலையும்இந்தியா நிறுத்திவிட்டது.

இந் நிலையில் தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இந்தியாவில் தனது ராணுவ முகாம்களை அமைக்கஅமெரிக்கா முயன்று வருகிறது. குறிப்பாக இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கராணுவ தலைமையகமான பென்டகன் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

Pentagonஇத் தகவலை அமெரிக்க- இந்திய நட்புறவு குறித்து தீவிரமாக வாதாடி வரும் அமெரிக்க பாதுகாப்புத்துறைநிபுணரான ஜான் இ. கார்பாக் தனது http://www.usindiafriendship.net இணையத் தளத்தில் இதனைத்தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் Indo-US Military Relationship: Expectations and Perceptions என்றதலைப்பில் சமீபத்தில் பென்டகன் தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும் இந்திய ராணுவ தளங்களைபயன்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்டகனின் மூத்த அதிகாரிகள் அனைவருக்கும் இந்தியா மீது தனி பிரியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜான் இ.கார்பாக் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திய ராணுவ முகாம்களில் அமெரிக்கப் படைகளின் நடமாட்டைத்தை சீனா நிச்சயம் விரும்பாது.இதனால் இந்தியா- சீனா இடையே பதற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த விஷயத்தில் ரஷ்யாவின்ஆலோசனையைப் பெற்றே இந்தியா எந்த முடிவையும் எடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X