For Daily Alerts
Just In
முன்னேற வேண்டுமா? ஜெயலலிதாவைப் பாருங்கள்: துணைவேந்தர்
சென்னை:
சென்னையில் அமைக்கப்படவுள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பள்ளிக்கான புதிய கட்டடங்களுக்கு முதல்வர்ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இதேபோல, அண்ணா பல்கலைக்கழக வெள்ளிவிழாவையொட்டி கட்டப்படவுள்ள நிர்வாக அலுவலகக்கட்டடத்திற்கும் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி கூறுகையில்,
முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் ஜெயலலிதாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவரைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தை முன்னணி மாநிலமாக்க வேண்டும் என்பதுமட்டுமல்லாது, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் விதத்திலும் முதல்வர் ஜெயலலிதாசெயல்படுகிறார் என்றார்.


