போப்பாண்டவரை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு முழு உரிமை உண்டு: சு.சுவாமி
சென்னை:
மதமாற்றத் தடுப்புச் சட்டம் குறித்துக் கருத்துக் கூறிய போப் ஆண்டவரை விமர்சிக்க முதல்வர்ஜெயலலிதாவுக்கு முழு உரிமையும் உண்டு என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிகூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை விமர்சித்து போப் ஆண்டவர் கருத்துக் கூறுகிறார்.அதேபோல, போப்பை விமர்சித்துக் கருத்துக் கூற ஜெயலலிதாவுக்கும் உரிமை உண்டு.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற திமுக டிவு செய்து விட்டது. அதற்கு ஒருகாரணம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான், முரசொலி மாறனுக்கு தவறான சிகிச்சைதரப்பட்டுள்ளதாகக் கூறி விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை நெருக்குகிறார்கருணாநிதி.
விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் அதை காரணமாகவே வைத்தே கூட்டணியை விட்டுவெளியேறி விடுவார் கருணாநிதி என்றார் சுவாமி.
காவலர் சங்கம்: சுவாமி மனு ஏற்பு
இந் நிலையில், தமிழகத்தில் போலீசார் சங்கம் அமைக்க அனுமதி தர வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக சுவாமி தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும்நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய முதலாவது டிவிஷன் பெஞ்ச், மனுவைவிசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது.
இதுதொடர்பாக 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உள்துறைச் செயலாளர், காவல்துறைதலைவர் (டிஜிபி) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


