16 மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் மாறும்
சென்னை:
மக்கள் தொகைக்கேற்ப சட்டசபை தொகுதிகள் மாற்றி அமைக்கப்படவுள்ளன. இதன்படி தமிழகத்தில் 16மாவட்டங்களில் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என்று மாநில தேர்தல் அதிகாரிபழனிச்சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 2தொகுதிகள் கூடும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, வேலூர், தர்மபுரி, விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில்ஒரு சட்டசபைத் தொகுதி கூடும்.
ஆனால், வேறு சில மாவட்டங்களில் சட்டசபைத் தொகுதிகள் 1 அல்லது 2 குறையும். மொத்தத்தில் 234 சட்டசபைத்தொகுதிகள் என்ற தற்போதைய எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்றார்.
சமீபத்தில் சென்னை வந்த தேர்தல் கமிஷனின் தொகுதிகள் மறுவரையறைக் குழு அனைத்துக் கட்சியினரிடமும்ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றது. அப்போது அனைத்துக் கட்சியினருமே தமிழகத்தில் சட்டமன்றத்தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இதை அந்தக் குழு ஏற்றுக் கொண்டுவிட்டது.


