For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி சாவு: ஏமாற்றப்பட்ட கணவர்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்தார். ஆனால், அவர்இறந்ததையே கணவரிடம் தெரிவிக்காமல், அவரிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு திடீரெனமனைவியின் உடலை ஒப்படைத்துள்ளனர்.

சேலம் சின்னகொல்லப்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அசோகன். இவரது மனைவி மாரியம்மாள் (வயது36).

இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன் மாரியம்மாள் குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன்செய்து கொண்டார். ஆனாலும், ஒன்பது மாதங்களுக்கு முன் மீண்டும் கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியான மாரியம்மாள் கடந்த 16ந் தேதி பிரசவத்துக்காக சேலம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். 18ம் தேதி காலை வலி அதிகரித்ததால் பிரசவ அறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால், அப்போது திடீரென மாரியம்மாள் இறந்தார்.

அவர் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்ட டாக்டர்கள், உடனே பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருந்தகணவர் அசோகனை நர்ஸ்கள் மூலம் அழைத்தனர். அவரிடம் எந்த விஷயத்தைக் கூறாமமல் ஆவணங்களில்கையெழுத்து வாங்கினார். பிரசவசத்துக்காகத் தான் கேட்கின்றனர் என்று நினைத்து அவரும் கையெழுத்துப்போட்டார்.

கையெழுத்து வாங்கிய பின், உன் மனைவி திடீரென இறந்து விட்டாள். அவளை பிரேத பரிசோதனை செய்யவேண்டுமானால் பணம் செலவாகும். எனவே, யாருக்கும் தெரியாமல் பிணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுஎன்று கூறி உடலைத் தந்துள்ளனர்.

ஒரு கணம் அதிர்ச்சியில் ஆடிப் போனார் அசோகன். என்ன செய்வது என்று தெரியாமல் மனைவியின் உடலில்விழுந்து அழுதார். கிளம்பு, கிளம்பு என்று நர்ஸ்கள் மிரட்டவே, அந்த ஏழைக் கூலித் தொழிலாளி எதிர்த்துப் பேசக்கூட மன பலம் இல்லாமல் மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார்.

ஆனால், இச் சம்பவம் அவரது வீட்டருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் குறித்து சேலம் 2வது தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ. கார்த்தி நிருபர்களிடம் பேசுகையில்,பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியம்மாள் மூன்று நாட்களுக்கு பின் திடீரெனஇறந்துவிட்டதாக மருத்துவமனை கூறுகிறது.

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் உடனடியாக பிரசவம் பார்த்திருந்தால் கூட தாய் அல்லது சேய் யாரையாவதுஒருவரை பிழைக்க வைத்திருக்க முடியும். ஆனால், ஏழைகள் என்பதால் பணம் ஏதும் கிடைக்காது என்று அவருக்குஅறுவை சிகிச்சை செய்யாமல் விட்டுள்ளனர்.

இந்தச் சாவுக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் முழு பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.

இது குறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயபால் கூறுகையில், கர்ப்பிணி சாவு குறித்துவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தவறு யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடிசாவு குறித்து விவரம் சொல்லாமல் கர்ப்பிணியின் கணவரிடம் கையெழுத்து வாங்கியதாக சொல்வது தவறானசெய்தி என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X