திமுகவை வீழ்த்துவதே லட்சியம்: ராம.கோபாலன்
கரூர்:
எந்தெந்த வழிகளில் எல்லாம் திமுகவை வீழ்த்த முடியுமோ, அந்த வழிகளை எல்லாம் இந்து முன்னணிபயன்படுத்தும் என்று அந்த அமைப்பின் தலைவர் ராம.கோபாலன் கூறினார்.
கரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் நெருங்கும்போது இந்து முன்னணி எந்தக் கூட்டணியில்இடம்பெறும் என்பதை முடிவு செய்வோம். ஆனால் எந்தக் கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், திமுகவைவீழ்த்துவதே எங்களது முதல் லட்சியமாக இருக்கும்.
எந்தெந்த வகையில் திமுகவை வீழ்த்த முடியுமோ அவை அத்தனையையும் பயன்படுத்துவோம்.
திருவேற்காடு கோவிலில் 1,053 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதை விமர்சித்துள்ளார் கருணாநதி.அதே கோவிலில் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இலவசத் திருமணம் செய்து வைக்க வேண்டியதுதானேஎன்று கிண்டலடித்துள்ளார்.
மசூதிகள், சர்ச்சுகளின் நிதியை மாநில அரசு கையாளுமானால், அவர்களது திருமணத்தையும் அரசே நடத்தத்தயாராக உள்ளது. ஆனால், இதுவரை சர்ச் மற்றும் மசூதிகளின் நிர்வாகத்தை மாநில அரசு எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கான முயற்சிகளையும் எந்த அரசும் எடுக்கவில்லை என்றார்.


