For Daily Alerts
Just In
நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலின் ஜாமீன் மனுவை பூந்தமல்லிபொடா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த ஏப்ரல் 12ம் தேதி கோபால் கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி கைதுசெய்யப்பட்டு அவர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன்னை ஜாமீனில் விடக் கோரி பொடா நீதிமன்றத்தில் கோபால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைவிசாரித்த நீதிபதி ராஜேந்திரன் மனுவைத் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார்.
தற்போதைய நிலையில் கோபாலை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று சந்தேகிப்பதால்ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி தெரிவித்தார்.


