15ம் தேதி ராகு பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் வரும் 15ம் தேதி ராகுப் பெயர்ச்சி விழாநடைபெறுகிறது.
நவக்கிரக ஸ்தலங்களில் மிக முக்கியமானது இந்த ஆலயம். இங்கு ராகு பகவான் தனது இரு தேவியருடன் அருள்பாலித்துவருகிறார். வரும் 15ம் தேதி காலை 10.35 மணிக்கு ராகு பெயர்ச்சி நடக்கிறது.
ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு ராகு பகவான் மாறுகிறார். இதையொட்டி 13ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைதொடங்கும். 15ம் தேதி வரை நான்கு கால பூஜை நடக்கும். அன்றைய தினம் ராகு பகவானுக்கு மஹா அபிஷேகம், தீபராதனைகள்நடைபெற உள்ளன.
ராகு பகவான் சேஷ வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications