For Daily Alerts
Just In
தலித் பஞ்சாயத்து தேர்தல்: அனைத்து கட்சி குழுவை அனுப்ப மார்க்சிஸ்ட் கோரிக்கை
கம்பம்:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களுக்கு அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழுவை அனுப்பி,தேர்தல் தொடர்பாக அந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சம்பந்தப்பட்ட தலித் கிராம பஞ்சாயத்துக்களில் தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆளுங்கட்சியைச்சேர்ந்தவர்கள் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அனைத்துக் கட்சியையும் சேர்ந்த குழுவைஅனுப்பி சுமூக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதைத் தடை செய்யும் உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.

