டாக்டர் பட்டம்: ஸ்டாலினுடன் ஐரீஷ் பல்கலை. பிரதிநிதிகள் சந்திப்பு
சென்னை:
![]() |
ஐரீஷ் பன்னாட்டுப் பல்கலைக்கழகக் குழுவினர் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினை நேரில் சந்துத்துகெளரவ டாக்டர் பட்டம் பெற லண்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்தப் பல்கலைக்கழகம் வரும் 27ம் தேதி ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
இந் நிலையில் பல்கலைக்கழகக் குழுவினர் ரால்ப் தாமஸ் என்பவர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில்ஸ்டாலினைச் சந்தித்து அழைப்பிதழையும், டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான விவர அறிக்கையையும்வழங்கினர்.
சென்னை மாநகரில் நேரடியாகத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர்என்பதற்காகவும், மேயராக இருந்த காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காகவும்
இந்தப் பட்டம் வழங்கப்படுவதாக ஐரீஷ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இந்தப் பட்டத்தைப் பெற ஒரு நாள் பயணமாக ஸ்டாலின் லண்டன் செல்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா உள்நாட்டில் டாக்டர் பட்டங்களை வாங்கி குவித்து வரும் நிலையில், ஸ்டாலின் வெளிநாட்டுபல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்ருவது புருவங்களை உயரச் செய்துள்ளது.


