நாயுடுவை சந்தித்த கலாம், அத்வானி
சென்னை:
நக்சலைட்டுகளின் கண்ணி வெடித் தாக்குதலில் படுகாயமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில்சந்தித்து உடல் நலம் விசாரித்தனர் ஜனாதிபதி அப்துல் கலாமும் துணைப் பிரதமர் அத்வானியும்.
இதன் பின்னர் நாயுடுவைச் சந்தித்த ஜனாதிபதி அப்துல் கலாமும் இன்று ஹைதாரபாத் வந்தார். அவரைஅமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று நாயுடுவின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நாயுடுவிடம்உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கிளம்பினார் கலாம்.
முன்னதாக நேற்று சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து ஹைதராபாத்கொண்டு செல்லப்பட்டார். கழுத்து எலும்பு உள்பட 3 எலும்புகள் உடைந்து போயுள்ள அவருக்கு வீட்டிலேயேசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துபாய் செல்ல இருந்த இந்த விமானம் நேற்று முன் தினமே நாயுடுவுக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்குஅனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து துபாய் பயணிகள் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்துவேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் நாயுடுவுக்கு சிகிச்சை தர அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தனி ஹெலிகாப்டரில் திருப்பதிக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே நாயுடு மீது கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர்கருணாநிதியும் கடும் கண்டனம் தெவித்துள்ளனர்.
இதற்கிடையே கிளேமோர் மைன் எனப்படும் கண்ணி வெடியை 6 மாதங்களுக்கு முன்பே திருப்பதி மலைப்பாதையில் நக்சலைட்டுகள் புதைத்துவிட்டதாகவும், திருப்பதி கோவிலில் கருட சேவையின்போது ஆந்திர முதல்வர்அங்கு வருவது மரபு என்பதால், அந்த நாளில் தாக்குதல் நடத்த 6 மாதத்துக்கு முன்பே திட்டம்தீட்டப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.
மேலும் நாயுடுவின் கார் வரிசையில் 20 கார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை வெள்ளை நிறஅம்பாசிடர் கார்கள். இதில் சரியாக நாயுடுவின் காரை அடையாளம் வைத்து கண்ணிவெடியை வெடிக்கச்செய்துள்ளனர் நக்சலைட்டுகள்.
மேலும், நாயுடுவின் கார் வரும் நேரம், அந்த கார் வரிசையின் வேகம் இதையும் மிகத் துல்லியமாக அறிந்துவைத்து குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இது ஆந்திர போலீசாருக்கும் மத்திய உளவுப் பிரிவினருக்கும் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் ரகசிய வயர்லெஸ் உரையாடல்களை நக்சலைட்டுகள் தொடர்ந்து ஒட்டு கேட்டு வந்திருக்க வேண்டும்என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந் நிலையில் இன்று தனது வீட்டில் நிருபர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, இது எனக்கு இறைவன் கொடுத்துள்ளமறு ஜென்மமாகவே கருதுகிறேன். இந்த மறு பிறவியை நான் மக்களுக்கே அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார்


