For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

3 நீதிபதிகள் குழுவின் பரிந்துரையையடுத்து தமிழக அரசால் பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண் ஊழியர் தூக்கமாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில்கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் தாமஸ் நிர்மலா. ஆழ்வார் திருநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர்ஸ்டிரைக்கில் கலந்து கொண்டதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்.

இந் நிலையில் 3 நீதிபதிகள் குழு விசாரணையில் கலந்து கொண்ட தாமஸ் நர்மலா, கடந்த 15 ஆண்டுகளாக தான்உடல் நலக்குறைவுடன் இருப்பதாகவும், ஸ்டிரைக் காலத்தின்போது கூட மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்ததாகவும் கூறி அதற்கான சான்றிதழ்களையும் சமர்ப்பித்திருந்தார்.

இருப்பினும், சமீபத்தில் அரசு வெளியிட்ட நிரந்தர டிஸ்மிஸ் ஊழியர்கள் பட்டியலில் நிர்மலாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. 57 வயதான நிர்மலா அடுத்த ஆண்டு ஓய்வு பெறவிருந்தார். இந் நிலையில் தான் டிஸ்மிஸ்செய்யப்பட்டிருப்பதை எண்ணி மிகவும் வேதனையுற்றார்.

மிகவும் சோகத்துடன் இருந்த அவர் நேற்றிரவு ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். இதையடுத்துமயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரைப் போலவேடிஸ்மிஸ் செய்யப்பட்ட 587 ஊழியர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் ஒட்டப்பட்ட டிஸ்மிஸ் பட்டியலில் தங்கள் பெயரைப் பார்த்த ஆண், பெண் ஊழியர்கள்பலரும் கதறி அழுததைப் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது.

அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்: கிருஷ்ணசாமி

இந் நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,

வேலை இழந்த ஊழியர்கள் கண்ணீர் விடும் நிலை நீடிக்கக் கூடாது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள்முடிவு கட்டவேண்டும். நீதிமன்றம்- வழக்கு ஒருபுறம் இருந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும்வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து மாதம் ரூ.1 வீதம் வசூலித்து பொது நிதிஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

சுமார் 1 கோடி உறுப்பினர்களிடம் நிதி வசூலித்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கமுடியும். இது குறித்து அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X