புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?: விளம்பரத்தை நிறுத்த மகளிர் ஆணையம் கோரிக்கை
சென்னை:
தமிழ்நாட்டையே கலக்கிக் கொண்டிருக்கும் புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்ற விளம்பரத்தை நிறுத்துமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிவி, பத்திரிக்கைகள், சாலைகளில் விளம்பரப் பலகைகள் என எங்கு பார்த்தாலும் இந்த விளம்பரம் நீக்கமற நிறைந்துள்ளது.
புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்ற கேள்வியை மட்டும் கேட்டும் இந்த விளம்பரத்தில் பதில் ஏதும் சொல்லப்படுவதில்லை. இதனால் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பரவியிருப்பது உண்மைதான் என்றாலும் அதைவிட பல மடங்கு குழப்பமும் மக்களிடையே பரவியுள்ளது.
இப்போது இந்த விளம்பரம் சினிமாக்களில் ஜோக் சீன்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தான் இந்த விளம்பரத்தை மேற்கொண்டு வருகிறது. விலைமாதிடம் செல்லும் நபர் ஆணுறை அணியாவிட்டால் எய்ட்ஸ் வரும் என்று இந்த விளம்பரம் அவுட்லைன் செய்கிறது.
இதில் விலைமாது தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே தவிர, பல பெண்களிடம் உறவு வைக்கும் ஆணால் எய்ட்ஸ் பரவும் என்பதை இந்த விளம்பரம் தெளிவாக சுட்டிக் காட்டவில்லை என்கிறதது மகளிர் ஆணையம்.
இந்த விளம்பரம் ஆண்-பெண் உறவை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாகவும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் கூறியுள்ளது. இந்த விளம்பரங்களை நிறுத்துமாறும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் டாக்டர் வசந்தி தேவி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக திட்ட இயக்குனர் தீனபந்துவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் மகளிர் அமைப்புகளுடன் கலந்து பேசி அதன் பின்பு வெளியிடுவதே சரியானது.
புள்ளி ராஜா விளம்பரங்களைப் பார்க்கும்போது, பெண்கள் மட்டுமே எய்ட்ஸுக்குக் காரணம் என்பது போலவும், அவர்கள் மூலமாகத்தான் எய்ட்ஸ் பரவுவது போலவும் தோற்றம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் சரியில்லாதவர்கள், அவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும், ஆணுறை இருந்தால் ஆண்கள் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கருத்தை தொனிப்பது போல புள்ளிராஜா விளம்பரங்கள் உள்ளன.
ஆண்கள் மூலமே விபச்சாரிகளுக்கு எய்ட்ஸ் பரவுவதாக நிரூபிக்கப்பட்ட தகவல்கள் உள்ளன. அதேபோல, ஆயிரக்கணக்கான குடும்பப் பெண்களுக்கு, அவர்களது கணவர்கள் மூலமே எய்ட்ஸ் பரவியுள்ளது.
உண்மை இப்படியிருக்க பெண்களை இழிவுபடுத்தவது போலவும், எய்ட்ஸ் பரவுவதற்கு அவர்கள்தான் காரணம் என்பது போலவும் புள்ளி ராஜா விளம்பரங்கள் பறை சாற்றுவது கண்டனத்துக்குரியது.
இத்தகைய விளம்பரங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று டாக்டர் வசந்தி தேவி கோரிைக்கை விடுத்துள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications