மேட்டூர் அணையைத் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே வாடும் பயிர்களைக் காக்க மேட்டூர் அணையை உடனடியாகத் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள வாண்டியார் இருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பாசாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து கடந்த 22ம் தேதி முதல்தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
இதனால் பயிர்கள் தண்ணீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாண்டியார் இருப்பு உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வல்லம் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், ஓரத்தநாடு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள்விரைந்து வந்து விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் இறுதியில் வரும்வியாழக்கிழமைக்குள் மேட்டூர் அணையைத் திறக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்துவிவசாயிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications