For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமதாஸ் முடிவில் மூர்த்தி அதிருப்தி?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகுவதாக எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்துமத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமக விலகியதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மூர்த்தி,என்.டி.சண்முகம் இருவரும் பிரதமரைச் சந்தித்து ராஜினாமா கடிதங்களைக் கொடுப்பது என்றும் அக் கட்சிமுடிவெடுத்துள்ளது.

கட்சியின் இந்த முடிவில் இரு மத்திய அமைச்சர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

என்.டி.சண்முகம் மத்திய அமைச்சர் பொறுப்பு கிடைத்தது முதலே கட்சித் தலைமை மீது அதிருப்தியாக உள்ளார்.அவர் கேட்டது துறைக்குப் பதிலாக உணவு பதப்படுத்தும் துறையை ராமதாஸ் வாங்கித் தந்ததாலும், தன்னை விடஜூனியரான ஏ.கே.மூர்த்திக்கு ரயில்வே துறை தரப்பட்டதாலும் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இதனால் கட்சிப் பணிகளில் அவர் ஆர்வத்துடன் ஈடுபடுவது கிடையாது, எந்த நிகழ்ச்சியிலும் அதிகம்தலைகாட்டாமல் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். இந் நிலையில் இப்போது அந்தப் பதவியும்பறிபோவதை அவரால் ஏற்க முடியவில்லை என்கிறார்கள்.

தனது அதிருப்தியை அவர் கட்சியின நிறுவனர் ராமதாஸிடம் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல, ஏ.கே. மூர்த்திக்கு பதவி இழக்க மனமே இல்லை. தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்களாக இருந்த10 பேரில் ஏ.கே.மூமர்த்தி மட்டும்தான் சிறந்த அமைச்சர் என்ற பெயரைப் பெற்றவர்.

அவரது பணியை பா.ஜ.க. முதல் அதிமுக வரை அனைத்துக் கட்சியினரும் பொது மக்களில் அனைத்துத்தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

தமிழக மக்களின் மனதில் மிகக் குறுகிய காலத்தில் தனி இடம் பிடித்தவர் என்ற பெருமையும் மூர்த்திக்கு உண்டு.தமிழக மக்கள் யாருமே கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாரத்துக்கு ஒரு ரயிலைமாநிலத்துக்குக் கொண்டு வந்தார்.

நிறைய ரயில்வே பாலங்களை கட்டிக் கொடுத்துள்ளர். தொடர்ந்து ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளைசெய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால், செல்வாக்கான பொறுப்பில் இருந்தாலும் கட்சிக்கு அவர் போதிய அளவில் நிதியுதவி செய்யவில்லைஎன்று ராமதாஸ் அவர் மீது கடுப்பில் இருந்து வருகிறார்.

இதனால் அவரை பதவியை விட்டுத் தூக்க ராமதாஸ் நினைத்திருந்தார். இந் நிலையில் கூட்டணியை விட்டேவிலகுவதால் பதவி போகப் போகிறது.

ஆனால், தனக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு ராமதாசிடம் மூர்த்திகோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அது நிராகக்கப்பட்டு விட்டதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

எப்படி இருந்தாலும் கட்சி முடிவுக்குக் கட்டுப்பட்டு இருவரும் ராஜினாமா செய்வார்கள் என்றே தெரிகிறது.

அடுத்த தேர்தலில் மூர்த்திக்கு போட்டியிட வாய்ப்புத் தர மாட்டார் என்கிறது பா.ம.க. வட்டாரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X