For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களுக்கு எதிராய் சூழ்ந்திருக்கிறது இனப் பகை: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

விருததுநகர் திமுக மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்குத் தான் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மேடைக்கு வந்த வைகோவை மாநாட்ட்டு மண்டபத்துக்குள் கூடியிருந்த லட்சக்கணக்கான தொணடர்களும்எழுந்து நின்று, கைதட்டி, வாழ்த்திக் கோஷமிட்டு வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

என்னை 10 வருடம் சிறையில் போட்டாலும் அஞ்சமாட்டேன். நிலை மாற மாட்டேன். ஆனால், தம்பி வெளியேவா, சிலிர்த்தெழுந்து வா, உனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று என் தலைவன கலைஞர் உத்தரவிட்டார்.சிறையிலும் நீதிமன்றத்திலும் என்னை வந்து பார்த்து தைரியம் சொன்னார்.

நான் உயிரோடு இருக்கும் வரை, என் உடலில் ஜீவன் இருக்கும் வரை கருணாநிதியை மறக்க மாட்டேன்.

இன்று தமிழர்களை சூழ்ந்திருக்கிறது இனப் பகை. அந்தப் பகையை விரட்டவே வெளியே வந்தேன்.

காஞ்சி சங்கராச்சாரியாரைப் பார்த்துக் கேட்கிறேன். எங்கள் மண் தமிழக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும்போற்றி வளர்த்த மண். நக்கீரன் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்த மண். பத்துப்பாட்டு, பெருந்தொகை,பதினென்கீழ்கணக்கு உலாவிய பூமி.

சிறப்பு மிக்க தமிழ்த் தெய்வங்களுக்கு தமிழில் வழிபாடு நடத்துவதில் என்ன தவறு?. அதை எப்படி காஞ்சிசங்கராச்சாரியார் தடுக்கலாம்? தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

ஆரிய நாகரீகமே முதல் நாகரீகம் என்கிறாரர் முரளி மனோகர் ஜோஷி. இதற்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். தந்தை பெரியார் இந்தியாவை காந்தி தேசம் என்றார். அந்த காந்தியைக் கொலை செய்த இயக்கத்தைச்சேர்ந்த சாவர்க்கருக்கு நாடாளுமன்றத்தில் படம் வைக்கிறார்கள்.

டெல்லிக்கு இணையாய் இங்கும் அநியாயம். எங்கள் பத்தினி தெய்வம் கண்ணகியின் சிலையைஅகற்றியிருக்கிறார்கள். கண்ணகி தமிழ்ப் பெண் என்ற கோபமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம்ஜெயலலிதாவுக்கு விரைவில் வரும்.

கலகம் வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிப்பவன் அல்ல.ஜெயலலிதாவின் அரசு தேர்தல் வெற்றிக்காக வன்முறையை நாடலாம். இதக் கருத்தில் கொண்டு நாம் தேர்தல்பணியாற்ற வேண்டும்.

வழக்குகள் என் கால் தூசிக்கு சமானம். எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் ஜெயலலிதா என் மீது போடலாம்.ஆனால், தமிழ் இனத்தின், தமிழுணர்வின், ஜனநாயகத்தின் ஆணி வேரை இந்துத்துவா கும்பலோடு சேர்ந்துகொண்டு தகர்க்க நினைக்கும் ஜெயலலிதாவை விட மாட்டேன் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X