For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி: ஜெ. மீது கடும் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா மீதும் பா.ஜ.க. மீதும் கடும் தாக்குதலுடன் தனது ஒரு மாத கால பிரச்சாரத்தை மெரீனாகடற்கரையின் விவேகானந்தர் நினைவிடத்தில் இருந்து இன்று மாலை கருணாநிதி தொடங்கினார். அப்போதுபல்லாயிரக்கணக்கான திமுகவினரும் பொது மக்களும் அங்கு கூடினர். இதனால் கடற்கரைச் சாலையில்போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.

இதே இடத்தில் தான் ஜெயலலிதாவும் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுவந்த கூட்டத்தைப் போல பல மடங்கு அதிகமான கூட்டம் கூடியிருந்தது.

பிரச்சாரத்தைத் தொடங்கி கருணாநிதி பேசியதாவது:

கோடிக்கணக்கான இந்தியர்கள் பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கும்போது இந்தியா எப்படிஒளிரும்?. உண்மையைச் சொன்னால் இந்தியா இருண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பரிலேயே தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டத்தை ஆரம்பித்தேன்.அப்போது அதை பா.ஜ.க தலைவர்கள் கிண்டலடித்தார்கள். நாகரீகமில்லாத அரசியல் செய்கிறேன் என்றார்கள்.தமிழுக்கு மரியாதை தர மறுத்த அவர்களோடு இருக்க முடியாது என்று சொல்லி வெளியே வந்துவிட்டோம்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் வேதனைகளை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். அதைச் சுட்டிக்காட்டினால் எதிர்க் கட்சியினர் மீது வழக்குகள் போட்டு தனது தவறை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்.

இவர்களைப் போன்றவர்கள் டெல்லியிலும் தமிழகத்திலும் ஆட்சியில் தொடரத்தான் வேண்டுமா? என்றுவாக்காளர்களான உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். பக்கத்து மாநிலங்களோடு சதா சண்டை போட்டஜெயலலிதாவால் தமிழகம் இன்று பெரும துயரத்தில் சிக்கிக் கிடக்கிறது.

காவிரியில் தண்ணீர் கிடைக்காமல் போனதற்கு அம் மாநில முதல்வர் கிருஷ்ணாவுடனான ஜெயலலிதாவின் மோதல்போக்கு தான் காரணம். இதை மறைக்க எதிர்க் கட்சிகள் மீது புகார் சொல்கிறார் அந்த அம்மையார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெயலலிதாவோடு சேர்ந்து கொண்டு தமிழக மக்களுக்கு மோசடிசெய்துள்ளார்.

சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் வந்ததாகச் சொல்லி ஒரு விழா நடத்தி, அதில் ஜெயலலிதாவுடன் பங்கேற்றார்நாயுடு. ஆனால், இப்போது அதே நாயுடுவிடம் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. தண்ணீரேதராமல் ஒரு விழா.

தமிழகத்துக்கு உதவவில்லை செயல்படாத பிரதமர் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வாஜ்பாயை வாய்க்குவந்தபடி வசைபாடினார் ஜெயலலிதா. இப்போது தன் பெயரைச் சொன்னால் ஓட்டு கிடைக்காது என்பதால்,வாஜ்பாய் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

சென்னையின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சியில் எடுத்த எல்லா திட்டங்களையும் நிறுத்திவிட்டார் ஜெயலலிதா.கட்டப்பட்டு வந்த பாலங்கள் பாதியில் நிற்கின்றன.

அதே நேரத்தில் புதிய வீராணம் போன்ற வெட்டியான திட்டங்களில் ரூ. 720 கோடியை செலவிட்டுக்கொண்டிருக்கிறார். ரூ. 20 கோடியில் நாங்கள் அந்தத் திட்டத்தை ஆரம்பித்தபோது அது உதவாத திட்டம் என்றுதெரியவந்தது. இதனால் மேற்கொண்டு பணத்தை அதில் வீணாக்காமல் திட்டத்தை கைவிட்டோம். இப்போதுஅந்த திட்டத்துக்கு புதுப் பெயர் தந்து மக்கள் பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. காவிரியில்தண்ணீரே வராதபோது அதை நம்பியிருக்கும் வீராணம் ஏரிக்கு எப்படி தண்ணீர் வரும்.

அராஜகம், மமதைக்கு இலக்கணமான ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட, நாட்டில் அமைதி நிலவ, மத்தியில்மதசார்பில்லாத அரசு அமைய திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

இதன் பின்னர் கருணாநிதி காஞ்சிபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பிறகுஆரணி, செய்யார், கலசப்பாக்கம் வழியாக திருவண்ணாமலை செல்கிறார். அங்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

நாளை செங்கம், ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யும் கருணாநிதி இரவு கிருஷ்ணகிரியில்பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். 24ம் தேதி தளி, ஓசூர் ஆகிய இடங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கருணாநிதி. மே 8ம் தேதி வரை அவர் பிரச்சாரம் செய்வார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X