6 தொகுதிகளுக்கும் அனுப்பப்படும் சென்னை ரஜினி ரசிகர்கள்
சென்னை:
ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்துள்ள 6 தொகுதிகளிலும் ரசிகர் மன்றம் சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்பொறுப்பு சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தரப்பட்டுள்ளது.
பாமக போட்டியிடும் புதுவை உள்ளிட்ட 6 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க ரஜினிரசிகர்கள் சபதம் எடுத்துள்ளனர். ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவும், 6 தொகுதிகளிலும் அதிமுக,பா.ஜ.க. வேட்பாளர்கள்தான் ஜெயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார்.
இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ரசிகர்கள் குதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட 6 தொகுதிகளைச் சேர்ந்தரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
தற்போது 6 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக 3தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தர்மபுரி தொகுதிக்கு சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ஓம் சேகர், புதுவை தொகுதிக்குசென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைத் தலைவர் சூர்யா, செங்கல்பட்டு தொகுதிக்கு சென்னை மாவட்டரசிகர் மன்ற பொறுப்பாளர் ராமதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர சென்னையில் உள்ள ரஜினி ரசிகர்கள் செங்கல்பட்டு, திண்டிவனம், புதுவை ஆகிய தொகுதிகளுக்குச்சென்று பாமகவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் பாமகவினர் கதிகலங்கியுள்ளனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications