ரஜினி பிரசாரத்தில் குதிப்பாரா?
சேலம்:
நடிகர் ரஜினிகாந்த் 6 தொகுதிகளில் அதிமுக, பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் கூட அந்தத்தொகுதிகளில் நேரடியாக பிரசாரம் செய்ய மாட்டார் என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவ்தெரிவித்துள்ளார்.
ரஜினி ரசிகர்களை பாமக எதிர்ப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தி ஒருமுனைப்படுத்தும் பணியில் சத்யநாராயணராவ் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வட மாவட்டங்கள் மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகளில் தீவிரசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளின் செயல் வீரர்கள் கூட்டம் சேலத்தில்நடந்தது. இதில் சத்யநாராயண ராவும் கலந்து கொண்டார்.
பின்னர் தர்மபுரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பு.தா. இளங்கோவனை ஆதரித்துத் தீவிர பிரசாரம் செய்வதுகுறித்து ரசிகர்களுக்கு அவர் விளக்கினார். எப்படிப் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுரைவழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சேலம், கடலூர், புதுவையில் ரசிகர்கள் போராட்டம்நடத்தியதாகவும், ரஜினி உருவ பொம்மையை எரித்ததாகவும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை.அவர்கள் உண்மையான ரஜினி ரசிகர்கள் இல்லை. ரஜினி ரசிகர்கள் போர்வையில் வேறு சிலர் இவ்வாறுநடந்துள்ளனர்.
ரசிகர்களுக்கு எந்த பாதிப்பையும் கொடுக்க ரஜினி விரும்பமாட்டார். எனவே நாங்கள் எடுக்கும் முடிவுரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
6 தொகுதிகளிலும் ரசிகர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். ரஜினி பிரசாரத்தில் ஈடுபட மாட்டார் என்றார்சத்யநாராயண ராவ்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications