காங்கிரசுக்காகத் தான் திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமுமுக
காரைக்கால்:
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே உண்மையான மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்க முடியும் என்று தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகம் கூறியுள்ளது.
இக் கட்சியின் தலைவர் பேராசியர் ஜவாஹிருல்லா புதுவை மாநிலம் காரைக்காலில் செய்தியாளர்களிடம்பேசுகையில், காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்துத்தான் திமுக தலைைமயிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.
முஸ்லீம் மக்களை திசை திருப்பும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது பாஜக. முஸ்லீம்கள்தாங்களாகவே பாஜகவில் ஏராளமான அளவில் சேர்ந்து வருகிறார்கள் என்று அக்கட்சி சொல்வதை நம்பும்அளவுக்கு முஸ்லீம்கள் முட்டாள்கள் அல்ல.
அயோத்தியில் எப்படியாவது ராமர் கோவில் கட்டப்படும் என்று பாஜகவின் விஷன்-2004 அறிக்கையில்தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் முஸ்லீம் சமுதாயத்திற்கு பாஜக செய்யும் நன்மையா?
புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காககடுமையாக உழைக்கவுள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications
