For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி குறித்த கேள்விகளால் கருணாநிதி எரிச்சல்: பிரஸ் மீட்டில் இருந்து வெளிநடப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ரஜினியையும் எம்.ஜி.ஆரையும் ஒப்புமைப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டதால் எரிச்சலடைந்தகருணாநிதி பத்திரிக்கையாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார்.

இன்று கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கருணாநிதி காலையில் நிருபர்களைச் சந்தித்தார்.வழக்கம்போல் தனக்கே உரிய நகைச்சுவையுடன் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், ரஜினி குறித்த கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் தர மறுத்தார்.

இந் நிலையில் ஒரு நிருபர், எம்.ஜி.ஆரிடம் நீங்கள் வாங்கிய அடி காரணமாகவே ரஜினி குறித்துஎதுவும் பேச பயப்படுகிறீர்களா? என்று கேட்டார்.

இதனால் கடுப்பான கருணாநிதி, என்னை யாரும் அடிக்க முடியாது. நான் அடித்தால் யாரும்தாங்கவும் முடியாது. நீங்கள் (நிருபர்) உள்பட என்றார்.

இந் நிலையில் இன்னொரு நிருபர், யாரை அடிப்பேன் என்று சொல்கிறீர்கள்? ரஜினியையா?நிருபரையா? என்று கேட்டார்.

இதனால் எரிச்சலடைந்த கருணாநிதி, பிரஸ் மீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.கோயம்புத்தூரில் நான் நடத்தும் கடைசி பத்திரிக்கையாளர் சந்திப்பு இதுதான் என்று கருணாநிதிகூறிவிட்டுச் செல்ல நிருபர்கள் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.

முன்னதாக நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னெள தொகுதியில் ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை தருகிறோம் என்று கூட்டத்தைக் கூட்டி, அதில் ஏற்பட்ட நெரிசலில் 22பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதைக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் தேர்தல்கமிஷன் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

22 ஏழைப் பெண்கள் மிதிபட்டு இறந்த இந்த விஷயத்தை காட்டக் கூடாது என்று டிவி நிருபர்களைக்கூட பா.ஜ.கவினர் மிரட்டியுள்ளனர்.

தமிழகத்திலும் ஜெயலலிதா அரசும் இதே போன்ற விதிமீறல்களைத் தான் செய்து கொண்டிருக்கிறது.அது குறித்து புகார் கொடுத்தும் தேர்தல் கமிஷன் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் கருணாநிதி பேசுகையில், தேர்தலுக்குப் பின் மத்தியில் தொங்கு நாடாளுமன்றம்ஏற்பட்டாலும் பா.ஜ.கவை ஆதரிக்க மாட்டோம். இனி அக் கட்சிக்கு ஆதரவே கிடையாது என்றார்.

வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எங்களது கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்துபோட்டியிடுவோம் என்றார்.

உத்தரப் பிரதேச பா.ஜ.க. முன்னாள் தலைவர் லால்ஜி தண்டன் தனது பிறந்த நாளையொட்டிவாஜ்பாய்க்கு ஓட்டு திரட்ட இலவச சேலைகள் வழங்கினார். ரூ. 50 கூட பெறாத அந்தச் சேலைகளைவாங்க ஆயிரக்கணக்கான மிகவும் ஏழ்மையில் வசிக்கும் பெண்கள் முண்டியடித்ததில் அந்தஅசம்பாவிதம் நடந்தது.

முன்னதாக கோவையில் பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி,

பா.ஜ.கவினர் இலவச சேலை வழங்குவதாகச் சொல்லி பெண்களைக் கூப்பிட்டு நடத்திய விழாவில்கூட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள் உயிர்விட்டுள்ளனர். இந்தியா எப்படிஒளிர்கிறது பாருங்கள்.

குஜராத்தில் மதக் கலவர வழக்கை மகாராஷ்டிரத்துக்கு மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம். அந்தஅளவுக்கு குஜராத்தில் பா.ஜ.கவின் தலையீடு நீதித்துறையில் இருக்கிறது. அதே போலஜெயலலிதாவின் சொத்து வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. தர்மபுரியில் பஸ்ஸை எரித்துகல்லூரி மாணவிகளை அதிமுகவினர் கொன்ற வழக்கும் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.

இதன் மூலம் குஜராத்தை ஆளும் மோடி அரசும் தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசும் ஒன்று தான்என்பது நிரூபணமாகிவிட்டது என்றார்.

50 ரூபாய் சேலைக்காக உயிரையும் பறி கொடுக்கும் ஏழைகள் வசிக்கும் நிலையில், இந்தியாஒளிர்வதாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வருவதை பல கட்சியினரும் சுட்டிக் காட்டிகண்டித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X