For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியை நம்பி தமிழர்கள் ஏமாறக் கூடாது: வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழர்களே ரஜினியின் பேச்சைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள் என்று திராவிடர் இயக்கத் தலைவர்கி.வீரமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை விவரம்:

சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, ஊழலையும் வன்முறையையும் விரும்பாதவன்நான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகர் ரஜினி, பா.ஜ.கவை ஆதரிக்கப் போவதாய்அறிவித்திருக்கிறார்.

நதி நீர் இணைப்பு என்பது பல்லாண்டுகளால் சிந்திக்கப்பட்டு வரும் நல்ல திட்டம். பல லட்சம் கோடிரூபாய் மதிப்பிலான திட்டம் என்பதால், உலக வங்கியிடம் நாட்டை அடமானம் வைக்க விரும்பாதகாங்கிரஸ், அத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

1998, 1999ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் கூட இந்தத் திட்டத்தை முன்மொழிந்தாராஎன்றால் இல்லை. தமிழகம்- கர்நாடகம் இடையே மோதல் தீவிரமானதையடுத்து வேறுவழியில்லாமல் வாஜ்பாய் முன்மொழிந்திருக்கும் திட்டம் தான் நதிகள் இணைப்பு.

இந் நிலையில் பா.ஜ.கவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துவிட்டு அதற்காக காரணத்தை பின்னால்கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார் நடிகர் ரஜினி.

யாருக்கு வாக்ளிப்பது என்பது அவரவர் உரிமை. அதை யாரும் மறுக்க முடியாது. அதே போலவன்முறையை பா.ம.க. செய்தாலும் பா.ஜ.க. செய்தாலும் அதை ஏற்க முடியாது.

குஜராத் மதக் கலவரத்தில் நடந்த கொலைகள் தொடர்பான விசாரணையையை நரேந்திர மோடியின்பா.ஜ.க. அரசு சரியாக நடத்தவில்லை என்று சொல்லி, அந்த வழக்கையே மகாராஷ்டிரத்துக்குமாற்றியிருக்கிறது உச்ச நீதிமன்றம். வன்முறையை நடத்தியதே பா.ஜ.கவினர் தான் என்பதால்விசாரணையை திசை திருப்பிக் கொண்டு சென்றார் மோடி.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் வன்முறையாளர்கள் அணி எது என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. அதே போல பாபர் மசூதியை இடித்து இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ரத்தஆறு ஓடவிட்டு, அதன் பின்னர் வன்முறைகளுக்கும் வித்திட்டதும் பா.ஜ.கவினர் தான்.

பின்னர் தங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் வந்தவுடன் அந்த வழக்கில் இருந்து விடுவித்துக்கொண்டவர்கள் யார் (அத்வானி) என்பதை நாடறியும்.

ரஜினியின் வன்முறை பற்றிய இலக்கணமே வினோதமானது என்பதற்கு அவரது அறிக்கையேசான்று. அடித்தால் திருப்பி அடிப்போம் என்பது தானே அவரது தத்துவம். அது வன்முறைஇல்லையா? சட்டத்தை நாட வேண்டிய ஒருவர் சட்டத்தை தனது கையில் எடுப்பது நியாயயமா?

வரும் தேர்தலில் முக்கிய கேள்வி இது தான். மக்களின் அமைதி வாழ்வு, சக வாழ்வு, நல்லிணக்கவாழ்வு தேவையெனில் மதசார்பில்லாத அணியே வெல்ல வேண்டும்.

இதனால் தமிழர்களே ஏமாந்து விடாதீர்கள்.

இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X