For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி ஒரு ஒட்டுண்ணி: ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

திமுக தலைவர் கருணாநிதியை ஒரு ஒட்டுண்ணி என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸுக்குஆதரவாக ஜெயலலிதா பேசினார். அப்போது, ராமதாஸ் ஒரு ஜாதி வெறியர், அரசியல் விதூஷகர். அவரைஅரசியலை விட்டே விரட்டியடிக்க மக்கள் இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் வன்முறைக்கு வித்திட்டவர் ராமதாஸ்தான். ஆனால் வன்முறைக்கு வித்திட்டவர்கள் அந்தவன்முறைக்கே பலியாவார்கள். இதுதான் இயற்கையின் நியதியும் கூட. வன்னியர்களுக்கு ராமதாஸ் செய்ததை விடஎனது ஆட்சி செய்ததுதான் ஏராளம். அதை அந்த சமுதாய மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக ஜெயிலுக்குப் போனவர் வைகோ. ஆனால் ஏதோ மக்கள் நலனுக்காகசிறைக்குப் போனவர் போல அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

சர்க்காரியா கமிஷன் புகழ் கருணாநிதி, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்திவிட்டார். உலகளாவிய அளவில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அவர் என்றுமே குரல் கொடுத்ததில்லை.மத்திய அரசில் ஒட்டுண்ணியாக இருந்த கட்சிதான் திமுக. ஒட்டுண்ணி என்றாலே ரத்தத்தை உறிஞ்சுவதுதான்.ஒட்டுண்ணிக்கு நல்ல உதாரணம் கருணாநிதி.

திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் (டி.ஆர்.பாலு) ஒருவர் தமிழக அரசின் நலத் திட்டங்களைகுலைப்பதற்காகவே அமைச்சர் பதவியில் இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பிறகு 15 ஆண்டுகள் இந்தியக்குடியுரிமை பெறாமல் இருந்தார். ராஜிவ் பிரதமரான பின்னரே குடியுரிமை பெற்றார்.

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ளசோனியாகாந்தி ஒரு நாளாவது தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளாரா? தமிழகத்தின் மீதுஅக்கறை இல்லாத அவர் இப்போது ஆதரவு கேட்டு வருகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்டவேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 1,584 கோடி ருபாய் நிதியும், 10.8 லட்சம் டன் அரிசியும் தரவேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தோம். 292 கோடியும், 3 லட்சம் டன் அரிசியும் வழங்கமத்திய அரசு முன்வந்துள்ளது. திமுகவும், மற்ற கட்சிகளும் மத்திய அரசிலிருந்து விலகிய உடன் தமிழகத்துக்குநன்மைகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

தமிழக மக்களுக்காக நாள் ஒன்றுக்கு 20 மணிநேரம் உழைக்கிறேன். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கஅடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்தே எப்போதும் சிந்தித்து வருகிறேன். மக்களவையில் அதிமுகஉறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால்தான் தமிழகத்தின் குரல் வலிமை பெறும் என்று பேசினார்ஜெயலலிதா.

பிரசாரத்தின்போது லாட்டரிக்குத் தடை விதித்தது, கோவில்களில் அன்னதானத் திட்டம் உள்ளிட்ட பல்வேறுதிட்டங்களை தனது சாதனைகளாகக் கூறினார் ஜெயலலிதா.

தொண்டர் பலி:

மதுரையில் நடந்த ஜெயலலிதாவின் பொதுக் கூட்டத்துக்கு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் பஸ்சில் அடிபட்டுஇறந்தார்.

தெற்கு வாசலைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் வேன் மற்றும் பஸ்களில் தமுக்கம் மைதானம் நோக்கிவந்துகொண்டிருந்தனர். தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்தபோது, தெற்குவாசல் புஞ்சை மேட்டுதெருவைச் சேர்ந்த குமார் (29) என்பவர் வேன் மேல் ஏறி நடனமாட ஆரம்பித்தார். அப்போது நிலை தடுமாறியஅவர் சாலையில் விழுந்தார்.

வேனின் பின்னால் வந்து கொண்டிருந்த அதிமுக தொண்டர்கள் அடங்கிய பஸ் ஒன்று, கீழே விழுந்த குமார் மீதுஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் உடல் நசுங்கி பலியானார். மாங்குளத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர்ராமநாதனை தெற்கு வாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X