For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எக்ஸிட் போல்: சரிகிறது பா.ஜ.க.- முன்னேறுகிறது காங்கிரஸ் கூட்டணி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மக்களவைக்கு மூன்று கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், எக்ஸிட் போல் மற்றும் கருத்துக்கணிப்புகளின்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதுதெரியவந்துள்ளது.

முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 20ம் தேதி நடந்தது. இரண்டாவது கட்டமாக திரிபுராவில் மட்டும்தேர்தல் நடந்தது. மூன்றாம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது.

நேற்றைய தேர்தலின்போது நடத்தப்பட்ட இரண்டாவது எக்ஸிட் போல் முடிவுகளின்படி காங்கிரஸ் கூட்டணிஎதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் வெல்லும் என்று தெரிய வருகிறது. இருந்தாலும் ஆட்சி அமைக்க எந்தக்கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பதால் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் என்று தெரிகிறது.

இந்தியா ஒளிர்கிறது என்று பா.ஜ.க. முன் வைத்த கோஷம் தான் அக் கட்சியை பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளதாககருத்துக் கணிப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். வேலை வாய்பில்லாத இளைஞர்கள், அன்றாட வாழ்க்கையைத்தள்ளவே கஷ்டப்படும் ஏழைகள் ஆகியோர் மத்தியில் இந்த கோஷம் வயிற்றெரிச்சலையும், கோபத்தையும்ஏற்படுத்தியுள்ளது.

மூன்று கட்டமாக இதுவரை ஆந்திரா, அஸ்ஸாம், பிகார், சட்டீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட்,கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒரிஸ்ஸா, உத்தரப் பிரசேதம் மற்றும் யூனியன் பிரதேகங்களில் 279தொகுதிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

இந்த 279ல் பா.ஜ.க. கூட்டணிக்கு 125 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என என்.டி.டி.வி-இந்தியன்எக்ஸ்பிரஸ்- ஏ.சி.நீல்சன் நிறுவனம் நடத்திய எக்ஸிட் போல்களில் தெரியவந்துள்ளது. 1999ம்ஆண்டு தேர்தலில் இந்த 279 தொகுதிகளில் 173 இடங்ளை பா.ஜ.க. கூட்டணி வென்றது.

இம் முறை காங்கிரஸ் கூட்டணிக்கு 115 இடங்கள் கிடைக்கும் எனவும் மற்ற கட்சிகளுக்கு 39இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிகிறது. கடந்த தேர்தலில் இந்தத் தொகுதிகளில் காங்கிரசுக்கு 76இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 30 இடங்களும் கிடைத்திருந்தன.

இந்த மூன்று கட்டத் தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும்வெல்லப் போவது யார் என்ற கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

என்.டி.டி.வி.- இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி பா.ஜ.க. கூட்டணிக்குமெஜாரிட்டிக்கும் குறைவாக 235 முதல் 255 இடங்கள் தான் கிடைக்கும். ஆட்சி அமைக்ககுறைந்தபட்சம் 272 இடங்கள் வேண்டும்.

கடந்த முறை இக் கூட்டணி 291 இடங்களில் வென்றது. இம் முறை 36 முதல் 56 இடங்கள் வரைபா.ஜ.க. கூட்டணி இழக்கும் என்று தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணிக்கு 190 முதல் 210 இடங்கள் வரை கிடைக்கும். கடந்த முறை இக் கூட்டணி 145இடங்களில் தான் வென்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் மற்றும் சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ் கட்சி போன்ற பிற கட்சிகளுக்கு 100 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் என்றுதெரிகிறது.

இந்தக் கட்சிகளின் உதவியுடன் ,200 இடங்கள் வரை வெல்லும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைஅமைக்க முடியும் என்று என்.டி.டி.வியின் அதிபரும், பிரபலமான கருத்துக் கணிப்பாளருமானபிரணாய் ராய் கூறியுள்ளார்.

இந்தியா டுடே- ஆஜ் தக் கணிப்பு:

அதே போல இந்தியா டுடே- ஆஜ் தக் டிவி- ஹெட்லைன்ஸ் டுடே டிவி ஆகியவை நடத்தியஎக்ஸிட்போல் மற்றும் கருத்துக் கணிப்பின்படி 534 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு 266இடங்கள் (மெஜாரிட்டியான 272க்கும் குறைவாக) கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு175, பிற கட்சிகளுக்கு 102 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்டார் டிவி:

ஸ்டார் டிவியின் எக்ஸிட் போல்- கருத்துக் கணிப்பின்படி பா.ஜ.க கூட்டணிக்கு 267 முதல் 279வரையும், காங்கிரஸ் கூட்டணிக்கு 162 முதல் 172 வரையும், மற்ற கட்சிகளுக்கு 97 முதல் 109இடங்களும் கிடைக்கும்.

அதே போல கர்நாடத்தில் இடங்கள் குறைந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்என்றும், ஒரிஸ்ஸாவில் நவீன் பட்நாயக்-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதிஎன்றும் எக்ஸிட் போல்கள் கூறுகின்றன.

ஆனால், மக்களவைத் தேர்தலை பா.ஜ.க. முன் கூட்டியே நடத்த காரணமாக இருந்த ஹைடெக் சீப்மினிஸ்டரான சந்திரபாபு நாயுடு மண்ணைக் கவ்வுகிறார். அவரது கட்சி ஆந்திராவில் ஆட்சியைஇழப்பதோடு, மக்களவைத் தேர்தலிலும் படு தோல்வி அடையவுள்ளது.

கடந்த முறை பா.ஜ.கவுடன் இணைந்து மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 36யைதெலுங்கு தேசம் பிடித்தது. ஆனால், இம் முறை தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.கவுக்கு வெறும் 6தொகுதிகளே கிடைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன. ஆந்திராவில் 35 இடங்களில்காங்கிரஸ்- தெலுங்கான ராஷ்டிர சமிதி வெல்லும் என்று தெரிகிறது.

தமிழகம்:

இதற்கிடையே கடைசி கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள தமிழகம் மற்றும் கேரளத்தை பா.ஜ.க.மிரட்சியுடன் பார்க்க ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வீசி வரும் அலையில் பா.ஜ.கவும் சேர்ந்து அடித்துச்செல்லப்படும் என்று என்.டி.டி.வி கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இங்குள்ள 39 தொகுதிகளில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு அதிகபட்சமாக 5 இடங்கள் தான்கிடைக்கும் என்றும் திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள்தெரிவிக்கின்றன.

கேரளத்தில் காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும் சரிசமமாக வெல்லும் என்றும் அங்கு பா.ஜ.கவுக்குஒரு இடம் கிடைப்பதே கடினம் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X