அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்வி !
வாஷிங்டன்:
அமெக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வி ஆண்டுமுதல் தமிழ், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் வரலாற்றுக் கல்வி பயிற்றுவிக்கப்பட உள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாட்டு மொழிகள், கலாச்சாரங்கள் குறித்த பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றன. தெற்காசிய கல்வி கவுன்சில் மூலமாக இந்தி, பெங்காலி, உருது, நேபாளி ஆகிய மொழிகள்,அவற்றின் வரலாறு, கலாச்சாரச் செழுமை ஆகியவை ஏற்கனவே கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போதுதமிழும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் முதல் யேல் பல்கலைக்கழகத்தில் கல்வி ஆண்டு தொடங்குகிறது. இந்த கல்வி ஆண்டில்தமிழும் ஒரு பாடமாக அறிமுகமாகிறது.
யேல் பல்கலைக்கழக தெற்காசிய கல்விக் கவுன்சிலின் தலைவர் டி.ஆர்.சீனிவாசன் இத் தகவலைத் தெரிவித்தார்.யேல் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரிச்சர்ட்லெவினும் தமிழுக்கு புகழாரம் சூட்டினார்.
யேல் பல்கலைக்கழகத்திற்கும், சென்னைக்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியினர்இந்தியாவை ஆட்சி செய்தபோது, 1687ம் ஆண்டு முதல் 1692ம் ஆண்டு வரை சென்னை மாகாண ஆளுநராகஇருந்தவர் எலிஹு யேல். இவரது பெயரில்தான் யேல் பல்கலைக்கழகம் உருவானது.
2,000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் இந்தியாவின் இரண்டே செம்மொழிகளில் ஒன்று என யேல்பல்கலைக்கழகம் கூறியுள்ளது. தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றையும் பல்கலைக்கழகம் வெகுவாகபாராட்டியுள்ளது.
தமிழில் ஆய்வு மேற்கொள்ள உதவித் தொகையையும் வழங்கவுள்ள இந்தப் பல்கலைக்கழகம், மேல் படிப்புக்காகமாணவர்களை மதுரை தமிழ் சங்க கல்லூரிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இப்போது தான் யேல் பல்கலைக்கழகத்தில் முறைப்படியான தமிழ், கல்வி தொடங்கப்படுகிறதே தவிர, ஏற்கனவேதமிழ் கற்கவும், கற்றுத் தரவும் பல்வேறு ஏற்பாடுகள் இங்கு பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications