ரஜினியின் புதிய படம் - ஜக்குபாய்
சென்னை:
ரஜினி தனது புதிய படத்துக்கு ஜக்குபாய் என்று பெயரிட்டுள்ளார்.
ரஜினி தனது அடுத்த படத்துக்கு 4ம் தேதி (நாளை) பூஜை போடுவதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார்.
ரஜினி ஒரு கதையை உருவாக்கி கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறியிருக்கிறார். அதேபோல் கே.எஸ்.ரவிக்குமாரும் தன் பங்குக்கு ஒருபக்கா ஆக்ஷன் கதையை ரஜினியிடம் கூறியிருக்கிறார்.
இப்போது அந்த இரண்டு கதைகளையும் இணைத்து புதிதாக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அது தான் ஜக்குபாய்.
ரஜினி தனது சொந்த பேனரான அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ரஜினியின் அண்ணன்சத்யநாராயண ராவ் கெய்க்வாட் (ரஜினியின் ஒரிஜினல் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்), கே.முரளி, சத்யநாராயண ராவ்ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்கள்.
கே.எஸ்.ரவிக்குமாரின் வற்புறுத்தலின் பேரில், இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இளையராஜாவைப்போட ரஜினி விரும்பினாலும் ரவிக்குமார் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து லண்டனில் இருக்கும் ரஹ்மானைரஜினியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வற்புறுத்தி, அவரை இசையமைக்க ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறார்.
ரஜினியை தூக்கி நிறுத்தும் விதமாக பாடல்கள் எழுதக் கூடியவர் என்பதால் வைரமுத்துதான் இந்தப் படத்துக்கும் பாடல்கள்எழுதுகிறார். வாலியை வைத்து எடுத்த ரிஸ்க் போதும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவுக்கு ஜீவா, கலைக்கு சாபுசிரில், எடிட்டிங்குக்கு தணிகாசலம் என்று திறமை வாய்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
கதாநாயகி வாய்ப்பு ஜோதிகா, த்ரிஷா ஆகிய இருவரில் ஒருவருக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஜக்குபாய் படத்தின் ஸ்டில் வெளியிடப்பட்டுள்ளது. அரபு முஸ்லீம்கள் அணிவது போன்ற உடையில், கழுத்தில் ருத்திராட்சைக்கொட்டை, நெற்றியில் குங்குமம், பக்கத்தில் ஒரு மெஷின் கன் என வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் ரஜினி.
ரஜினியின் மராட்டிய குல வழக்கத்தில் பெண்களுக்கு பாய் என்றுதான் பெயர் முடியும். அதை நினைவூட்டும் வகையில் ஜக்குபாய்என்ற தலைப்பாம்.
ஜக்குபாய் என்ற வார்த்தையில், க் மற்றும் ய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்க துப்பாக்கி தோட்டாக்கள்பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாபா தோல்வியை ஈடுகட்டும் விதமாக, ஆக்ஷன் கலந்த இன்ஸ்டன்ட் கரம் மசாலாவாக இந்தப் படம் தயாராக உள்ளது.
ஜூலையில் படப்பிடிப்பைத் தொடங்கி, தீபாவளிக்கு வெளியிடத் தீர்மானித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications