For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ, அமைச்சர்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களும், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களும் இன்றுகாலையே தங்களது ஜனநாயகக் கடமையை வாக்களித்து நிறைவேற்றினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார். அமைச்சர்விசுவநாதன் நத்தம் அருகே உள்ள வேம்பார்பட்டியில் ஓட்டு போட்டார்.

அமைச்சர் இன்பத்தமிழன் ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியிலும், அமைச்சர் பன்னீர்செல்வம் பெரியகுளம்அக்ரஹாரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியிலும், அமைச்சர் சண்முகம் திண்டிவனம் வால்டர் ஸ்கடர்மேல்நிலைப்பள்ளியிலும் ஓட்டு போட்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்ப்பேட்டை வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வட சென்னைபா.ஜ.க. வேட்பாளர் சுகுமாறன் நம்பியார் கோபாலபுரம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தென் சென்னைதொகுதி அதிமுக வேட்பாளர் பதர் சையத், தொகுதிக்குட்பட்ட பல வாக்குச்சாவடிகளை சென்று வாக்குப்பதிவைபார்வையிட்டார்.

கோபிச்செட்டிபாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஈரோடு கச்சேரி வீதியில் நகராட்சிதொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் காரைக்கடி பக்கம் உள்ள கண்டருலூரிலும், அதிமுகவேட்பாளர் சுப.கருப்பையா தேவகோட்டை அருகே உள்ள கல்லங்குடியிலும் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.

கோவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் திருப்பூர் அவினாசி ரோடு பிஷப் பள்ளிவாக்குச் சாவடியில் வாக்களித்தார். தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமானசி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூர் அரண்மனை புதூர் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்வாக்களித்தார்.

நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மாஸ்டர் மாதன் ஊட்டி சேரிங் கிராஸ் கலைக்கல்லூரி வாக்குச் சாவடியிலும்,காங்கிரஸ் வேட்பாளர் பிரபு கோவை ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் முருகன், கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள வாக்குச்சாவடியிலும், மதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் கழுகரை ஊராட்சிஒன்றிய ஆரம்பப்பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனர்.

ராசிபுரம் காங்கிரஸ் வேட்பாளர் ராணி நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியிலும், அதிமுக வேட்பாளர் அன்பழகன் நாமக்கல்வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

திண்டுக்கல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் திருமங்கலத்தில் உள்ள பி.கே.என். உயர்நிலைப்பள்ளி உள்ளவாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் அருகே உள்ள டி.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகன் மகப்பூப்பாளையம் டி.பி.ரோட்டில்உள்ள அழகு சுந்தரம் நடு நிலைப்பள்ளியிலும்,

ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் சுவாமி பி.பி.குளம் உழவர்சந்தை அருகே உள்ள ரோட்டரி பிரைமரிபள்ளிக்கூடத்திலும் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் முருகேசன் ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்திலும், திமுகவேட்பாளர் பவானி ராஜேந்திரன் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளிக் கூடத்திலும் வாக்களித்தனர்.

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியிலும், மதிமுக வேட்பாளர்ரவிச்சந்திரன் கோவில்பட்டி, சிப்பிப்பாறை கிராமத்திலும் வாக்களித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் செம்பொன்குடி கிராம தொடக்கப் பள்ளியில் ஓட்டுபோட்டார்.

பா.ம.க. வேட்பாளர் டாக்டர் செந்தில் தர்மபுரி வள்ளலார் அறிவாலயப் பள்ளியில் வாக்களித்தார். தண்டராம்பட்டுஎம்.எல்.ஏ. வேலு கூடலூர் வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் வேணுகோபால் காட்டாம்பூண்டியி அரசு தொடக்கப்பள்ளியிலும்,திருச்செங்கோடு தொகுதி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு அருகே உள்ள எலவமலை பாரதிஆரம்ப பள்ளியிலும் வாக்களித்தனர்.

திண்டிவனம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தன்ராஜ் கரியமாணிக்கத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X