For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம், பாலு, தயாநிதி, அய்யர், அன்புமணி, ராஜா கேபினட் அமைச்சர்களாக பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிரதமர் மன்மோகன் சிங்குடன் 28 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதில் 6 பேர் தமிழகத்தைச்சேர்ந்தவர்களாவர்.

திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ராஜா ஆகியோரும், காங்கிரஸ் எம்.பியான மணிசங்கர் அய்யர், காங்கிரஸ்ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம், பாமக நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணி ஆகியோர் கேபினட்அமைச்சர்களாகியுள்ளனர்.

கேபினட் அமைச்சர்கள்:

1. பிரணாப் முகர்ஜி- காங்கிரஸ்

2. அர்ஜூன் சிங்- காங்கிரஸ்

3. சரத்பவார்- தேசியவாத காங்கிரஸ்

4. லாலு பிரசாத் யாதவ்- ராஷ்ட்ரீய ஜனதா தளம்

5. சிவராஜ் பாட்டீல்- காங்கிரஸ்

6. ராம்விலாஸ் பாஸ்வான்- லோக் ஜன்சக்தி

7. குலாம்நபி ஆசாத்- காங்கிரஸ்

8. ஜெய்பால்ரெட்டி- காங்கிரஸ்

9. சசிராம் ஓலா- காங்கிரஸ்

10. ப.சிதம்பரம்- காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை

11. மகாவீர் பிரசாத்- காங்கிரஸ்

12. பி.ஆர். கிந்தியா- காங்கிரஸ்

13. டி.ஆர்.பாலு- திமுக

14. சங்கர்சிங் வகேலா- காங்கிரஸ்

15. நட்வர்சிங்- காங்கிரஸ்

16. கமல்நாத்- காங்கிரஸ்

17. ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்- காங்கிரஸ்

18. பி.எம். சயீத்- காங்கிரஸ்

19. ரகுவன்ஸ் பிரதாப் சிங்- ராஷ்ட்ரீய ஜனதா தளம்

20. பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி- காங்கிரஸ்

21. மணிசங்கர் அய்யர்- காங்கிரஸ்

22. சுனித் தத்- காங்கிரஸ்

23. மீரா குமார்- காங்கிரஸ்

24. சந்திரசேகர் ராவ்- தெலுங்கானா ராஷ்ட்ரீயா சமிதி

25. சிபு சோரேன்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

26. ஏ.ராஜா- திமுக

27. தயாநிதி மாறன்- திமுக

28. அன்புமணி- பாமக

இவர்களுக்கான துறைகள் இன்று ஒதுக்கப்படும்.

இந்த 28 பேரில் 18 பேர் காஙகிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். காங்கிரசுக்கு அடுத்தபடியாக திமுகவுக்குத் தான்அதிக அளவாக 3 கேபினட் பதவிகள் தரப்பட்டுள்ளன.

அதே போல தமிழகம், மகாராஷ்டிரம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தான் அதிகமான அளவில்அமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X