திருச்சி, காரைக்குடி, சேலம் பல்கலைகழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் சென்னை: சேலம், திருச்சி, காரைக்குடியில் உள்ள பல்கலைகழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றும் டாக்டர் பாலகிருஷ்ணன் சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தராகவும், திண்டுக்கல் காந்திகிராமம் ரூரல் இன்ஸ்டியூட் பதிவாளராக இருந்து வரும் டாக்டர் கன்னியப்பன் காரைக்குடி அழகப்பா பல்கலைகழக துணைவேந்தராகவும், பேராசிரியர் டாக்டர் தங்கமுத்து திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை ஆளுநர் ராமமோகன்ராவ் பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேலம், திருச்சி, காரைக்குடியில் உள்ள பல்கலைகழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றும் டாக்டர் பாலகிருஷ்ணன் சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தராகவும், திண்டுக்கல் காந்திகிராமம் ரூரல் இன்ஸ்டியூட் பதிவாளராக இருந்து வரும் டாக்டர் கன்னியப்பன் காரைக்குடி அழகப்பா பல்கலைகழக துணைவேந்தராகவும்,
பேராசிரியர் டாக்டர் தங்கமுத்து திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை ஆளுநர் ராமமோகன்ராவ் பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications