இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
டார்வின்:
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினில் நடந்த இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 97 ரன்களுக்குசுருண்டது. அதேசமயம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 207 ரன்களையும், 2-வது இன்னிங்ஸில் 201ரன்களையும் எடுத்தது.
2வது இன்னிங்ஸில் 312 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் காஸ்ப்ரோவிச் சிறப்பாக பந்து வீசி 39 ரன்களை மட்டுமே கொடுத்து 7விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனால் 3 தினங்களுக்குள்ளேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கெய்ர்ன்ஸில் வரும்9-ம் தேதி தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் வார்னே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்வரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்விவரம் வருமாறு (விளையாடிய போட்டிகள் அடைப்புக்குறிக்குள்):-
1. முரளீதரன்- இலங்கை: 527 (90)
2. வார்னே- ஆஸ்திரேலியா: 520 (111)
3. வால்ஷ்- வெஸ்ட் இண்டீஸ்: 519 (132)
4. மெக்ராத்- ஆஸ்திரேலியா: 437 (96)
5. கபில்தேவ்- இந்தியா: 434 (131)
6. ரிச்சர்ட் ஹாட்லே- நியூசிலாந்து: 431 (86)
7. வாசிம் அக்ரம்- பாகிஸ்தான்: 414 (104)
8. அம்புரோஸ்- வெஸ்ட்இண்டீஸ்: 405 (98)
9. கும்பிளே- இந்தியா: 397 (84)
10. இயான் போத்தம்- இங்கிலாந்து: 383 (102)
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications