• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈழம் குறித்து எங்கும் பேசுவேன்: வைகோ

By Staff
|

பெங்களூர்:

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் பற்றியும் எங்கும்,எப்போதும் பேசுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு வைகோபேசியதாவது:

இந்த மாநாடு நடைபெறும் ஜூலை 25ம் நாளுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இதே ஜூலை 25-ம் தேதியில் 21வருடங்களுக்கு முன்பு 1983ம் ஆண்டு சிங்கள இனவெறியர்கள் வெளிக்கடை சிறையில் குட்டி மணி, ஜெகன்,தங்கதுரை போன்ற தமிழீழ ஆதரவாளர்களை வெட்டிக் கொலை செய்தனர்.

என்னை தூக்கிலிட்டால் எனது கண்களை ஒரு தமிழனுக்கு பொருத்துங்கள். என் கண்களாவது தமிழ் ஈழத்தைகாணட்டும் என்று கூறிய குட்டிமணியின் கண்கள் பூட்சு காலால் நசுக்கப்பட்டன.

அவர்களின் நினைவு தினமான இன்று இந்த நிகழ்ச்சியை நடத்தி இருப்பது பொருத்தமானது தான்.

இந்தக் கூட்டத்தில் நாம் பேசுவதை இந்த மாநில உளவு போலீசார், தமிழக உளவு போலீசார், மத்திய உளவுபோலீசார் குறிப்பெடுத்துக் கொண்டும், டேப்பில் பதிவு செய்து கொண்டும் இருக்கிறார்கள். நாங்கள் ஒன்றும் இங்குசதித்திட்டம் தீட்டவில்லை.

நான் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தேன். அந்தமனுவில், ஈழத்தமிழர் பிரச்சினை இப்போது வேறு பரிணாமத்தை அடைந்து உள்ளது. உலக நாடுகள் அனைத்தும்புலிகளை ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுவிட்டன.

பிரபாகரன் இலங்கையில் பேட்டி கொடுப்பது இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இது குறித்துநான் நாடாளுமன்றத்தில் என்ன பேசினேனோ, அதைத்தான் திருமங்கலம் தெரு வீதியில் பேசினேன். இது தவறாஎன்று உச்ச நீதிமன்றத்தில் கேட்டேன்.

தவறு தான் என்று தீர்ப்பு வழங்கி இருந்தால் அதை ஏற்று எத்தனை வருடம் ஆனாலும் சிறையில் இருந்திருப்பேன்.ஆனால் நீதிமன்றம், விடுதலைப்புலிகள் குறித்து பொதுக் கூட்டங்களில் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்றுதீர்ப்பு வழங்கியது. புலிகள் பற்றிப் பேசுவதற்கு கருத்துச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவன் என்ற முறையில் இந்தமாநாட்டில் கலந்து கொள்ள எனக்குத் தகுதி இருக்கிறது.

இப்போது ஈழத்தமிழர்கள் குறித்து திருமங்கலத்திலும் பேசலாம்; திருவனந்தபுரத்திலும் பேசலாம். சண்டீகாரிலும்பேசலாம்; பெங்களூரிலும் பேசலாம்.

இந்தியாவுடன் இலங்கை ஒரு ராணுவ ஒப்பந்தம் போடப் போகிறது என்று பேசப்படுகிறது. அது கவலைஅளிக்கிறது. அமெரிக்கா திரிகோணமலைமீது கண் வைக்கிறது. அந்த திரிகோணமலை துறைமுகப் பகுதிஎண்ணெய் வளமிக்க, இயற்கை துறைமுகமாகும். அந்த துறைமுகத்தை என்னிடம் கொடுத்தால் ஆசியா கண்டம்அனைத்தையும் பிடித்து விடுவேன் என்று நெப்போலியன் கூறினார்.

திரிகோணமலை தமிழர்கள் வாழும் இடம். தமிழர்கள் ஆதரவு இருந்தால் அங்கு அமெரிக்கா எதுவும் செய்யமுடியாது என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கருதினார். அதனால்தான் அவர் இலங்கை தமிழர்களைஆதரித்தார். இப்பொழுது இருக்கும் மத்திய அரசு கூட இந்திரா காந்தியின் வழியையே பின்பற்ற வேண்டும்.இதற்காக பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து வலியுறுத்துவேன்.

ஏற்கனவே இலங்கை தமிழர்களின் நலன் காக்க நார்வே தொடங்கி வைத்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியஅரசு கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து குறைந்தபட்ச செயல் திட்டத்தில்அதை இணைக்கக் கூறினேன். அதன்படி குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அது சேர்க்கப்பட்டது.

தமிழர்கள் எங்கு சென்றாலும் முதலில் அந்த மண்ணை வளப்படுத்துவார்கள். பின்பு அங்கேயே பாதிப்புக்குஆளாவார்கள். கர்நாடகத்தில் கோலார் தங்கவயலில் தமிழர்கள் தங்கம் எடுத்து நாட்டின் பொருளாதாரத்தைவளப்படுத்தினர். ஆனால் இப்போது அவர்கள் அகதிகளாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.

பெங்களூரில் தமிழர்களாகிய உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் கன்னடர்களும் நமது சகோதரர்கள்என்பதை உணர்ந்து, அவர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் பிரச்சினைகள் செய்தாலும், உங்களது நல்ல மனதைஅவர்கள் புரிந்து கொள்ளும்படி நீங்கள் நடந்து கொள்ளவேண்டும் என்றார் வைகோ.

விழாவில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனுக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X